பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கவிருந்த தமிழ் பிக்பாஸ் பிரபலம்.. அவரே வெளியிட்ட உண்மை.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அப்படி, பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஒன்று.
அண்ணன் - தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அப்படி தமிழில் உருவாக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்கள் வரவேற்பினால் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. 3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடருக்கும் இத்தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் விஜய் டெலிவிஷன் விருது கிடைத்தது.
தற்போது, இந்த காலத்தில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயம் தொடர்பாக கதை சென்று கொண்டிருப்பதால், ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க தொடங்கியுள்ளனர். மேலும், ஒரு கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் எதிர்பாராத சண்டைகள் வாக்குவாதங்கள் என சில பிரச்சனைகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலும் எழுந்து வருகிறது.
இதில் கதிர் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் குமரன். இவருக்கு இந்த சீரியல் மூலம் தனி ரசிகர்கள் பட்டாளமே சேர்ந்துள்ளது. இந்நிலையில், இந்த கதாபாத்திரத்தின் ஆடிஷனுக்கு பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜுவும் கலந்துகொண்டுள்ளாராம். ஆனால், ராஜூவை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யவில்லையாம்.
கதிர் கதாபாத்திரம் மட்டுமின்றி ஜீவா கதாபாத்திரத்திலும் நடிக்க ஆடிஷனில் கலந்துகொண்டவதாகவும், ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் ராஜு கூறியுள்ளார். இந்த விஷயத்தை, தான் தொகுத்து வழங்கி வரும் ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழு பங்கேற்ற போது ராஜு பகிர்ந்து கொண்டுள்ளார்.