பிதாமகன் படத்துல இந்த ரோல்'ல நடிச்சது ராஜ்கிரண் தான்.. பேட்டியில் நடிகர் சொன்ன தகவல் !

Rajkiran to act in pithamagan jailor role info revealed by actor

2003ம் ஆண்டு பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரமின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பிதாமகன். இப்படத்தில் சூர்யா, லைலா, சங்கீதா மற்றும் பல நடிகர்கள் நடித்திருந்தனர். நடிகை சிம்ரன் ஒரு கெஸ்ட் ரோலில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி அசத்தல் செய்திருந்தார்.

Rajkiran to act in pithamagan jailor role info revealed by actor

இப்படம் விக்ரம் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று சொல்லலாம். இதற்கு முன்னரே, பாலா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெற்றி கொடுத்த திரைப்படம் சேது.

Rajkiran to act in pithamagan jailor role info revealed by actor

பிதாமகன் படத்தில் நடிகர்களை தேர்வு செய்வதில் நீண்ட நாள்களாக இழுபறி இருந்துள்ளது. இப்படத்தில், ஒரு ஜெயில் காட்சியில் மீசை ராஜேந்திரன் ஜெய்லராக அட்டகாசமாக நடித்திருப்பார். இப்படி இருக்கையில் இந்த ஜெயிலர் கதாபாத்திரத்திற்கு முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் இத்தனை வருடங்கள் கழித்து வெளியாகியுள்ளது.

Rajkiran to act in pithamagan jailor role info revealed by actor

இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தவர் நடிகர் ராஜ்கிரண். ராஜ்கிரண் நடித்துக் கொண்டிருப்பதை சூட்டிங்கில் மீசை ராஜேந்திரன் செட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாராம்.

Rajkiran to act in pithamagan jailor role info revealed by actor

சூட்டிங் முடிந்ததும் ராஜ் கிரண் போய்விட்டாராம். அதன்பின், ராஜேந்திரனை அழைத்து ஜெயிலர் கதாபாத்திரம்ல நடிக்கணும் என இயக்குனர் சொன்னதாக மீசை ராஜேந்திரனே ஒரு பேட்டியில் கூறினார்.

Share this post