தாத்தா வரேன் வா.. ஸ்கூலுக்கு போகமாட்டேன் என அடம்பிடித்த ரஜினி பேரனின் வைரல் கிளிக்..!

rajinis-daughters-son-who-is-eager-to-go-to-school

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து ஞானவேல் இயக்கி வரும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தில், ரஜினிக்கு வில்லனாக சத்யராஜ் நடிக்க இருப்பதாகவும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

rajinis-daughters-son-who-is-eager-to-go-to-school

இந்நிலையில், ரஜினியின் இரண்டாம் மகள் சௌந்தர்யாவின் மகன் ஸ்கூலுக்கு போக அடம் பிடித்த நிலையில், ரஜினி அழைத்து சென்று பள்ளியில் விட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

முன்னதாக, ரஜினிகாந்தை நேரில் பார்த்த சக மாணவர்கள் ஷாக்கிங் ரியாக்சனை கொடுத்தது குறித்து நெடிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Share this post