'தம்பி' உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ரஜினியின் பதிவு
தமிழ் திரையுலகை பொருத்தவரை சிவாஜி மற்றும் எம்ஜிஆர் அவர்கள் வரிசையில் நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் வைத்திருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையே. அவரது ஸ்டைல், பேச்சு, நற்குணம் என அனைத்திற்கும் ரசிகர் கூட்டம் என்ன படையே உள்ளது என்பது தான் உண்மை.
இந்நிலையில், கோலிவுட்டில் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தற்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார். அவர் பதவியேற்றுக் கொண்டதை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலர் உதயநிதி ஸ்டாலினுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என ட்வீட் செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகிவிட்டார்கள். சத்தியமாக இதை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை தலைவரே. தயவு செய்து ரசிகர்களின் இதயத்தை உடைக்காதீர்கள் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
பிற விஷயங்களை எப்படி பார்த்தும், பார்க்காதது மாதிரி இருக்கிறீர்களோ, உதயநிதி விஷயத்திலும் அப்படியே அமைதியாக இருந்திருக்க வேண்டும். நீங்கள் அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொன்னதை கூட ஏற்க முடிகிறது. ஆனால் இதை ஏற்க முடியவில்லை. வாரிசு அரசியலை ஆதரிக்கிறீர்களே. வாழ்த்து தெரிவிக்காமல் கடந்து போயிருக்கலாம் என்கிறார்கள். தன் கலைக்குடும்பத்தை சேர்ந்த உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதால் பாசமாக வாழ்த்தினார் ரஜினி. ஆனால் அதனால் வம்பில் சிக்குவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
ரஜினிகாந்த் வாழ்த்தியதில் என்ன தவறு இருக்கிறது, எங்கள் உதய்ணா அவரின் கடின உழைப்பால், நற்செயல்களால் இந்த பதவிக்கு வந்திருக்கிறார். இது வாரிசு அரசியல் இல்லை. சும்மா எதையாவது சொல்லி ரஜினியை திட்ட வேண்டாம் என்கிறார்கள் உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளர்கள். முன்னதாக தன் பிறந்தநாள் அன்று வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் ரஜினிகாந்த்.
அந்த அறிக்கையில் முதல் பாகத்தில் இருந்த அரசியல் தலைவர்களின் பெயர்களில் உதயநிதி ஸ்டாலினின் பெயர் இல்லை. முதல் பகுதியில் பாஜக நிர்வாகி அண்ணாமலையின் பெயர் இருக்க, உதயநிதியின் பெயர் இரண்டாம் பகுதியில் தான் இருக்கிறது ஏன் என்று ரஜினியிடம் சமூக வலைதளவாசிகள் கேட்டனர். தற்போது, இந்த வாழ்த்து ட்வீட் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.@Udhaystalin
— Rajinikanth (@rajinikanth) December 14, 2022