ரஜினி - கமல் திடீர் சந்திப்பு.. ரஜினி படத்தை இயக்கும் லோகேஷ் ? தீயாய் பரவும் புகைப்படங்கள் !

Rajinikanth and kamal haasan meet up photos getting viral on social media

மாநகரம் மற்றும் கைதி என்னும் 2 படம் மூலம் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

Rajinikanth and kamal haasan meet up photos getting viral on social media

ஹாட்ரிக் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாக அடுத்தடுத்து தந்த நிலையில், இவருக்கு 3 வது படமே தளபதி விஜய் அவர்களை வைத்து எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Rajinikanth and kamal haasan meet up photos getting viral on social media

இதன் மூலம் மாஸ்டர் திரைப்படம் 2021ம் ஆண்டு வெளியானது. ஒரு அளவுக்கு சுமாரான படமாக அமைந்த போதிலும் படம் நல்ல வசூலை பெற்றது. இந்நிலையில், தற்போது இவரது இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் விக்ரம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

Rajinikanth and kamal haasan meet up photos getting viral on social media

விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காயத்ரி, காளிதாஸ் ஜெயராம், சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பான் இந்தியா படமாக 5 மொழிகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இப்படம் வருகிற ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

Rajinikanth and kamal haasan meet up photos getting viral on social media

இதன் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இப்படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. ட்ரைலரில் சண்டை காட்சிகள், கோபம், சூர்யாவின் சிறப்பு தோற்றம் என பலதும் ரசிகர்கள் பேசி வந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் ட்ரைலர் மூலம் கதையை பற்றி எந்த மாதிரியான ஹின்ட் எதுவும் தெரிவிக்கவில்லை.

Rajinikanth and kamal haasan meet up photos getting viral on social media

இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக மீண்டும் விஜய்யுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. விஜய்யின் 67வது படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்பட்டது. இது குறித்து சூசகமாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது.

Rajinikanth and kamal haasan meet up photos getting viral on social media

தற்போது ரஜினி அவர்களை லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல் ஹாசன் சந்தித்துள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது. இதன் மூலம், லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தை ரஜினி வைத்து இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Rajinikanth and kamal haasan meet up photos getting viral on social media

Rajinikanth and kamal haasan meet up photos getting viral on social media

Share this post