மேடையிலேயே இளையராஜாவை வெச்சு செய்த ரஜினிகாந்த்.. முகம் மாறி போன இளையராஜா.. வைரலாகும் வீடியோ..
தமிழ் திரையுலகை பொருத்தவரை சிவாஜி மற்றும் எம்ஜிஆர் அவர்கள் வரிசையில் நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் வைத்திருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையே. அவரது ஸ்டைல், பேச்சு, நற்குணம் என அனைத்திற்கும் ரசிகர் கூட்டம் என்ன படையே உள்ளது என்பது தான் உண்மை.
சூப்பர்ஸ்டாருக்கு இன்று பிறந்தநாள் என்பதனால், ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவரை குறித்த பதிவுகள், புகைப்படங்கள், throwback வீடியோக்கள் என பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், தற்போது ஒரு வீடியோ செம வைரலாகி வருகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது ரஜினிகாந்தின் வள்ளி படத்திற்கு இளையராஜா இசையமைத்த பாடல்கள் குறித்து பேசப்பட்டது.
நடிகை சுஹாசினி ‘வள்ளி’ படத்தில் இளையராஜா போட்ட பாடல்கள் எல்லாம் சூப்பர்ஹிட் என புகழ்ந்து தள்ளினார். அதற்கு இளையராஜாவும் மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டே இருந்தார். இந்நிலையில், இடையே பேசிய ரஜினிகாந்த் வள்ளி படத்திற்கு இளையராஜா இசையமைக்கவில்லை, அவருடைய மகன் கார்த்திக் ராஜா தான் இசையமைத்தார் என்று கூற இளையராஜாவின் முகம் சுருங்கிப்போனது.
அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர். வள்ளி படத்திற்கு கார்த்தி ராஜா இசையமைத்திருக்கும் பட்சத்தில், அப்படத்திற்கு இசையமைப்பாளர் என இளையராஜா தன்னுடைய பெயர் தான் போட்டுள்ளார். இதை தற்போது நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
அப்போகூட உண்மையை ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை பாருங்க. pic.twitter.com/6b7RC9Q1Va
— கல்கி குமார் (@kalgikumaru) December 11, 2022