சில வருடங்களுக்கு முன்பே 'பொன்னியின் செல்வன்' பற்றி பேசிய ராஜமௌலி.. என்ன சொல்லிருக்கார் பாருங்க!
தெலுங்கு திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கப்படுபவர் இயக்குனர் ராஜமவுளி. இவர் இயக்கத்தில் நான் ஈ, மகதீரா, பாகுபலி 1 & 2, RRR உட்ப்பட பல திரைப்படங்கள் இவருக்கு வெற்றி வாகை பெற்றுத்தந்தது. இதனால், இந்திய திரையுலகம் மொத்தமும் ஸ்தம்பித்து திரும்பி பார்க்கும் வகையில் திரைப்படங்கள் படைத்திருந்தார்.
இந்நிலையில், பாகுபலி பிரம்மாண்டத்திற்கு இணையாக தற்போது, இயக்குனர் மணிரத்னம், கல்கியின் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியுள்ளார். மிகப்பெரிய முயற்சியால் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக்கி முதல் பாகத்தை வெளியிட்டுள்ளார் இயக்குனர் மணிரத்தினம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தெலுங்கு ரசிகர்கள் பலர் இந்த படம் பற்றி ஏளனமாக பேசி வருகின்றனர்.
இது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி 11 வருடங்களுக்கு முன்னரே, பொன்னியின் செல்வன் படம் பற்றி பேசியுள்ள விஷயம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது தமிழ் ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படித்திருக்கிறீர்களா என கேட்க படித்திருக்கிறேன் மிகவும் அற்புதமான கதாபாத்திரங்களை கொண்ட அழகான கதை என தெரிவித்துள்ளார்.
எஸ் எஸ் ராஜமவுலி கடந்த 2011ம் ஆண்டு இந்த கேள்விக்கு பதில் அளித்திருந்த நிலையில் அந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பொன்னியின் செல்வன் படம் பற்றி ஏளனமாக பேசும் தெலுகு ரசிகர்களுக்கு இந்த பதிவு ஒரு சாட்டையடி என பலரும் கூறி வருகின்றனர்.