பிரபல முன்னணி தமிழ் நடிகர் படத்தில் நடிக்கும் ராஜா ராணி சீரியல் நடிகை.. வைரலாகும் போட்டோ !
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர்களின் வரிசையில் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி 2. இதில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் அனைவரும் மிக பேமஸ்.
அந்த வகையில், ராஜா ராணி 2 தொடர் செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 1 தொடர்ந்து, ராஜா ராணி சீசன் 2 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஐபிஎஸ் கனவுடன் இருக்கும் ஒரு பெண் தனது வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகள் குறித்த கதை ஆகும்.
சந்தியா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆலியா, 2வது பிரசவத்திற்காக சீரியல் இருந்து விடுபெற்றார். அதன் பின்னர், ஆலியா மானசாவிற்கு பதிலாக ரியா அந்தகதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை, வெள்ளித்திரையில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். ராஜா ராணி 2 சீரியலின் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரவீனாவிற்கு தான் இந்த பட வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் ஏற்கனவே மலையாளம் மற்றும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்துள்ளார். தனுசுடன் பிரவீனா இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.