Viral Video: CWCல இப்டிதான் சமைப்பாங்களா.. ரகசியத்தை உடைத்த ராகுல் தாத்தா.. உண்மை சொன்ன ஸ்ருதிகா..
சின்னத்திரையை பொருத்தவரை சீரியல் தொடர்கள் மட்டுமல்லாது தற்போது நிறைய நிகழ்ச்சிகள் மக்கள் பேவரைட்டாக மாறிவிட்டது. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நிகழ்ச்சி குக் வித் கோமாளி. குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக மாறிவிட்டது குக் வித் கோமாளி.
2 சீசன்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து 3வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதில் கோமாளிகளாக வரும் ஆர்ட்டிஸ்ட் மூலமே இந்த நிகழ்ச்சியின் வெற்றி. இந்நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ரக்ஷன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் ஷெஃப் தாமோதரன், ஷெஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.
இந்நிகழ்ச்சி கொரோனா லாக் டவுன் போது வைரலாகவும், மக்கள் ஸ்ட்ரெஸ் பஸ்டாராக இருந்து வந்தது. அதிலும் இதில் கோமாளிகளாக இருந்து வரும் புகழ், ஷிவாங்கி, பாலா, சுனிதா, மணிமேகலை மக்கள் பேவரைட். முதல் சீசனில் வனிதா விஜயகுமார், இரண்டாவது சீசனில் கனி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
மூன்றாவது சீசனில் வித்யுல்லேகா ராமன்,ரோஷ்னி ஹரிப்ரியன், ஸ்ருத்திகா அர்ஜுன், கிரேஸ் கருணாஸ், அம்மு அபிராமி, தர்ஷன், சந்தோஷ் பிரதாப், அந்தோணிதாசன், மனோபாலா, ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், சிவாங்கி, சுனிதா, மணிமேகலை, முகம்மது குரைஷி, சக்தி, அதிர்ச்சி அருண், மூக்குத்தி முருகன், பாரத் கே ராஜேஷ், ஷித்தன் கிளாரின், சரத் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் ஸ்ருத்திகா டைட்டில் வின்னர் ஆனார்.
பலரும் ஸ்ருதிக்கா வெற்றி பெற்றதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் தாத்தா ஒரு பேட்டியின் போது நிகழ்ச்சி குறித்து பேசிய ஒரு விஷயம் சர்ச்சையானது. அதாவது, முதல் நாளே அடுத்த நாள் என்ன சமைக்க வேண்டும் என்று அனுப்பி விடுவார்கள் என்று கூறியிருந்தார்.
இது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இவ்வளவு நாள் நிகழ்ச்சியில் சர்ப்ரைசாக அன்றைய தினம் என்ன சமைக்க வேண்டும் என்பதை நடுவர்கள் வெளிப்படுத்துவார்கள் என்பது போல காட்டி வந்தனர்.
ஆனால், ராகுல் தாத்தா கூறி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்து. இந்நிலையில் இதுகுறித்து டைட்டில் வின்னர் ஸ்ருத்திகாவிடம் இந்நிலையில் பேட்டியில் கேட்டபோது, அது போல எல்லாம் ஒன்றும் கிடையாது. அங்கு சென்ற பின்பு தான் அவர்கள் என்ன சமைக்க வேண்டும் என்று கூறுவார்கள். அதில் நாங்கள் வித்தியாசமாக என்ன செய்ய முடியும் என்று சிந்தித்து உணவுகளை சமைப்போம் என்று கூறியிருந்தார்.
நாளைக்கு என்ன சமைக்கணும்னு முதல் நாளே Message அனுப்பிடுவாங்க, cook with comali நிகழ்ச்சியின் திருட்டுதனத்தை போட்டு உடைத்த ராகுல் தாத்தா #CookWithComali #cwc pic.twitter.com/z2T5nhJzH8
— RabiRam (@ramrabi11) August 3, 2022