LOVE TODAY பட டயலாக்கை பேசி மகனை பங்கமாக கலாய்த்த ராதிகா சரத்குமார்
மறைந்த பிரபல நடிகர் M. R. ராதா அவர்களின் மகள் தான் நடிகை ராதிகா. இவர் 2001ம் ஆண்டு நடிகர் சரத் குமார் அவர்களை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராகுல் என்ற மகனும் உள்ளார்.
மேலும், இவர்களுக்கு இது இரண்டாவது திருமணம் என்பதால் இதற்கு முந்தைய திருமணத்தில், சரத்குமார் அவர்களுக்கு வரலக்ஷ்மி சரத்குமார் மகளும், ராதிகாவுக்கு ரயானே என்னும் மகளும் உள்ளனர்.
ராதிகா 1978ம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்னும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.
திரைப்படங்களில் பிரபலம் பெற்ற இவர், ராடான் மீடியா என்னும் தயாரிப்பு கம்பெனியை தொடங்கி அதன் மூலம் நிறைய பிரபல சீரியல்களை தயாரித்து வந்தார். திரைப்படங்களில் நடித்து வரும் சமயத்திலேயே, சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி, வாணி ராணி என பல வெற்றி தொடர்கள் மூலம் பெரியவர்கள் முதல் இளசுகள் வரை கட்டி போட்டார். 1 தேசிய விருது, 6 பிலிம்பேர் விருதுகள், 3 தமிழக அரசு விருது என பல விருதுகளை குவித்துள்ளார்.
தற்போது, நிறைய திரைப்படங்களில் துணை முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான லவ் டுடே படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படத்தில் ராதிகா மகன் அடிக்கடி செல்போன் நோண்டிக்கொண்டு இருப்பதை திட்டி கொண்டே இருப்பார்.
தற்போது இவரும் இவரது மகனும் காரில் செல்லும்பொழுது தனது மகன் செல்போனை நோண்டிக்கொண்டிருப்பதை பார்த்து லவ் டுடே பட ஸ்டைலில் கலாய்த்துள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.