கையில் சிகரெட்.. கால் மேல் கால் போட்டு ஸ்டைலாக போஸ்.. சர்ச்சையில் சிக்கிய ராதிகா சரத்குமார்

Radhika sarathkumar with cigarette in hand photo getting controversy

மறைந்த பிரபல நடிகர் M. R. ராதா அவர்களின் மகள் தான் நடிகை ராதிகா. இவர் 2001ம் ஆண்டு நடிகர் சரத் குமார் அவர்களை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராகுல் என்ற மகனும் உள்ளார்.

Radhika sarathkumar with cigarette in hand photo getting controversy

மேலும், இவர்களுக்கு இது இரண்டாவது திருமணம் என்பதால் இதற்கு முந்தைய திருமணத்தில், சரத்குமார் அவர்களுக்கு வரலக்ஷ்மி சரத்குமார் மகளும், ராதிகாவுக்கு ரயானே என்னும் மகளும் உள்ளனர்.

Radhika sarathkumar with cigarette in hand photo getting controversy

ராதிகா 1978ம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்னும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.

Radhika sarathkumar with cigarette in hand photo getting controversy

திரைப்படங்களில் பிரபலம் பெற்ற இவர், ராடான் மீடியா என்னும் தயாரிப்பு கம்பெனியை தொடங்கி அதன் மூலம் நிறைய பிரபல சீரியல்களை தயாரித்து வந்தார். மேலும், இவர், திரைப்படங்களில் நடித்து வரும் சமயத்திலேயே, சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி, வாணி ராணி என பல வெற்றி தொடர்கள் மூலம் பெரியவர்கள் முதல் இளசுகள் வரை கட்டி போட்டார்.

Radhika sarathkumar with cigarette in hand photo getting controversy

1 தேசிய விருது, 6 பிலிம்பேர் விருதுகள், 3 தமிழக அரசு விருது என பல விருதுகளை குவித்துள்ளார். தற்போது, நிறைய திரைப்படங்களில் துணை முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஹரி இயக்கத்தில் வெளியான யானை படத்தில் அருண் விஜய்க்கு அம்மாவாக நடித்து அசத்தி இருந்த ராதிகா, அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவுக்கு தாயாக நடித்துள்ளார்.

Radhika sarathkumar with cigarette in hand photo getting controversy

இதுதவிர பாலாஜி குமார் இயக்கத்தில் உருவாகி வரும் கொலை என்கிற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கொலை படத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங் நடித்துள்ளனர். இப்படத்தின் கேரக்டர் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன.

Radhika sarathkumar with cigarette in hand photo getting controversy

அதன்படி சமீபத்தில் நடிகை ராதிகாவின் கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதில் நடிகை ராதிகா ரேகா என்கிற பாஸ் கேரக்டரில் நடித்துள்ளதாக குறிப்பிட்டிருந்த படக்குழு, அவரது போஸ்டரையும் வெளியிட்டிருந்தது. அதில் கையில் சிகரெட் உடன் சோபாவில் கால்மேல் கால்போட்டு கெத்தாக போஸ் கொடுத்தபடி இருக்கிறார் ராதிகா.

Radhika sarathkumar with cigarette in hand photo getting controversy

இதன்மூலம் அவருக்கு இப்படத்தில் மிகவும் பவர்புல்லான வேடம் கொடுக்கப்பட்டு உள்ளது என்பது உறுதியாகி உள்ளது. இது ஒருபுறம் இருக்க இந்த போஸ்டரில் நடிகை ராதிகா சிகரெட் வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Radhika sarathkumar with cigarette in hand photo getting controversy

Share this post