Viral Video: 'தமன்னாவ சுற்றி சுற்றி பார்த்தேன்.. ஒரு இடம் கூட கருப்பு இல்ல..' ராதா ரவியின் சர்ச்சை பேச்சு.. சின்மயியின் வைரல் பதிவு !
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடலை பாடியதன் மூலம் தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி.
இதையடுத்து பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய சின்மயி, குறுகிய காலத்திலேயே பல பேமஸ் பாடல்களை பாடியதன் மூலம் பிரபலம் அடைந்தவர். வாராயோ வாராயோ, சர சர சாரா காத்து, இதயத்தில் ஏதோ, கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியான 96 படத்தில் அவர் பாடிய பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கொடுத்த மீடூ புகார் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காக பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், தன்னுடையை நிலைப்பாட்டில் தீர்க்கமாக உள்ள சின்மயி, தனது கருத்துக்களை இடைவிடாது பதிவிட்டு வருகிறார். மேலும், பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.
இதனிடையே, 2014ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலனான ராகுல் என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்துகொண்டார். தற்போது, சின்மயி இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். குழந்தைகளின் பெயர்களோடு, அவர்களின் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அவர் மகிழ்ச்சியை பதிவு செய்தார்.
பொதுவாக பிரபலங்கள் பலர் கர்ப்பமாக இருக்கும்போது போட்டோஷூட் நடத்துவதும், வளைகாப்பு செய்வதும் அதன் புகைப்படங்களை தங்கள் சமூக வலைதளத்தில் பதிவிடுவதும் வழக்கமான ஒன்று. ஆனால், சின்மயி தான் கர்ப்பமாக இருப்பதை பற்றி ஒரு பதிவை கூட போடவில்லை. சின்மயிக்கு 37 வயது ஆனதால் சின்மயி வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்று இருப்பார் போன்ற விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்தார்.
அதில் ‘நான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை பதிவிடாததால் நிறைய பேர் எனக்கு DM மூலம் மெசேஜ் செய்து நான் வாடகை தாய் மூலம் தான் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தேனா என்று கேள்விகளை கேட்டு வருகின்றனர். என்னை பாதுகாத்துகொள்ள எனக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டும் இந்த விஷயம் தெரியும். நான் இப்போதும் எப்போதும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பாதுகாத்து தான் வைப்பேன். என்னுடைய குடும்பம், நண்பர்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படக்களை சமூக வலைதளத்தில் பதிவிட மாட்டேன். ‘ என பதிவிட்டு இருந்தார்.
தற்போது, ராதா ரவி குறித்து பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார் சின்மயி. அந்த பதிவு செம வைரல் ஆகி வருகிறது. அந்த பதிவில் ராதா ரவி, நடிகை தமன்னா பற்றி பேசியது குறித்த பதிவு. அதில் தமன்னாவை சுற்றி பார்த்தேன். ஒரு இடம் கூட கருப்பு இல்லை என அவர் பேசியிருப்பது மிகுந்த பேச்சு பொருளாக மாறியுள்ளது.
The President of the Dubbing Union that banned me from working in Tamil cinema. https://t.co/CDBHE0VBuR
— Chinmayi Sripaada (@Chinmayi) June 30, 2022