அப்போ ரச்சிதா நடிக்குறாங்களா..? அசீம் சொன்னது உண்மையா? கடும் வாக்குவாதம் செய்யும் ரச்சிதாவின் பழைய வீடியோ..

rachitha old video from a reality show getting viral on social media

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ரக்சிதா மஹாலக்ஷ்மி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய அனைத்து மொழி சீரியல் தொடர்களிலும் நடித்துள்ளார்.

rachitha old video from a reality show getting viral on social media

தமிழ் மொழியில், சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என அனைத்து பிரபல சேனல்களிலும் நடித்துள்ளார். பிரிவோம் சந்திப்போம், இளவரசி, சரவணன் மீனாட்சி 2 & 3, நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

rachitha old video from a reality show getting viral on social media

தன்னுடன் சீரியல் தொடரில் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஒரு ஆண்டாக கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.

rachitha old video from a reality show getting viral on social media

இவர்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க இருதரப்பு குடும்பத்தினரும் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரக்சிதா தற்போது ‘சொல்ல மறந்த கதை’ என்ற தொடரில் நடித்தார். தற்போது, பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

rachitha old video from a reality show getting viral on social media

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான சொல்ல மறந்த கதை தொடரில் நடித்து வந்த போது, இந்த தொடர் திடீரென்று நிறுத்தப்பட்டது. இதனால் கடுப்பான ரச்சிதா, கலர்ஸ் தமிழ் சேனலையும், சீரியல் குழுவையும் கடுமையாக விமரித்து இருந்தார். இப்படி தனக்கு பிரச்சனை வரும் போதெல்லாம் கொதித்தெழுந்த ரச்சிதா, பிக்பாஸ் வீட்டில் சாதுவாக தான் விளையாடி வருகிறார். ஆனால், ரச்சிதா இப்படிப்பட்ட ஆளே கிடையாது அவர் வெளியில் படு போல்டாக இருப்பார் என்று அசீம் அடிக்கடி கூறி வருகிறார்.

rachitha old video from a reality show getting viral on social media

ஆனால், ரச்சிதா நான் வெளியில் கூட இப்படி தான் கூறி வந்தார். இப்படி ஒரு நிலையில் ரச்சிதா, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘4M’ என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ரச்சிதா கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இதனை தற்போது பகிரும் நெட்டிசன்கள் இது தான் ரச்சிதாவின் உண்மை முகம் என்று கூறி வருகின்றன.

Share this post