ரச்சிதா பிக் பாஸில் வெற்றி பெற வாழ்த்து சொன்ன தினேஷ்.. ஆனா அவங்க கணவர் பத்தி ஒரு வார்த்தை கூட பேசல.. என்ன நடக்குது ?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ரக்சிதா மஹாலக்ஷ்மி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய அனைத்து மொழி சீரியல் தொடர்களிலும் நடித்துள்ளார்.
தமிழ் மொழியில், சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என அனைத்து பிரபல சேனல்களிலும் நடித்துள்ளார். பிரிவோம் சந்திப்போம், இளவரசி, சரவணன் மீனாட்சி 2 & 3, நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.
தன்னுடன் சீரியல் தொடரில் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஒரு ஆண்டாக கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இவர்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க இருதரப்பு குடும்பத்தினரும் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரக்சிதா தற்போது ‘சொல்ல மறந்த கதை’ என்ற தொடரில் நடித்து வருகிறர். இந்த தொடரில் கணவனை இழந்து, இரு குழந்தைகளை வளர்க்க போராடும் தாய் கேரக்டரில் நடித்து வந்தார். சமீபகாலமாக சோசியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, விதவிதமான கிளாமர் உடைகளில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.
தற்போது, பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். பிக் பாஸ் தொடக்க விழாவில், ரச்சிதா அவரது குடும்பத்தினரை அறிமுகப்படுத்தும்போது அப்பா, அப்பா மற்றும் சகோதரரை பற்றி பேசினார். அவரது பூனைக்குட்டியை பற்றி கூட பேசினார். ஆனால் கணவர் தினேஷை பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை. “I fall for people very easily. ஈஸியா நம்பிடுவேன்” என ரச்சிதா குறிப்பிட்டது, அவரது கணவர் பற்றி தான் மறைமுகமாக குறிப்பிடுகிறார் என சொல்லப்பட்டது.
இந்நிலயில், ரசித்தாவின் கணவர் தினேஷ், அவர் பிக்பாஸ் வெற்றி பெற வாழ்த்து கூறி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். பிக் பாஸில் கணவர் பற்றி ஒரு வார்த்தை கூட ரச்சிதா பேசவில்லை, எனினும் தினேஷின் இப்படியான பதிவால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
#பிக்பாஸ் இல்லத்தில்.. #RACHITHAMAHALAKSHMI #BiggBossTamil6 #GrandLaunch - இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #TuneInNow #BiggBossTamil #KamalHassan #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/T3yviLL6VI
— Vijay Television (@vijaytelevision) October 9, 2022