விக்ரமனை வெச்சு செய்த போட்டியாளர்கள்.. அட இதுக்காகவா? வைரலாகும் வீடியோ!
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
21 போட்டியாளர்களில் இப்போது 18 போட்டியாளர் உள்ளார்கள். கானா பாடகர் அசல் கோலார், மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்டோர் ஏவிக்ட் ஆகிவிட்டனர். ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மேலும், நேற்று ஷெரினா எவிக்ட் ஆகி வெளியேறினார்.
தற்போது, இந்த சீசனின் வலிமையான போட்டியாளர்களில் ஒருவரான விக்ரமனையே சில போட்டியாளர்கள் சேர்ந்து பிராங்க் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. குயின்ஸியை குழந்தை என்று அமுதவாணன் கூறியதை அடுத்து அதுகுறித்து விக்ரமன் கமெண்ட் அடித்துள்ளார். இதையடுத்து குயின்ஸி தன்னை குழந்தை என கிண்டல் செய்கிறார்கள் என்று கதறி அழ, நிவாஷினி அவருக்கு ஆறுதல் கூறுகிறார்.
இந்நிலையில், ஆயிஷா, விக்ரமன் மற்றும் அமுதவாணனிடம் எப்படி குயின்ஸியை நீங்கள் குழந்தை என்று சொல்வீர்கள் என்று வாதிடுகிறார். அதற்கு விக்ரமன், ‘நான் குயின்ஸியை குழந்தை என்று சொல்லவில்லை, அமுதவாணன் தான் கூறினார் என்று கூற ஆயிஷா அவருடன் தொடர்ந்து வாக்குவாதம் செய்கிறார்.
திடீரென ஆயிஷா, குயின்ஸி, நிவாஷினி சிரிக்க அதன் பின்னர் அது பிராங்க் என்பது தெரியவந்தது. விக்ரமனுக்கு அதன் பின்னர் தான் நிம்மதி ஏற்பட்டது. மூவரும் சேர்ந்து விக்கிரமனை பிராங்க் செய்த இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
#Vikraman #Ayesha and #Queency Prank 🤣🤣🤣#BiggBoss #BiggBossTamil#BiggBossTamil6 pic.twitter.com/i3aWcKXNI6
— BIGG BOX TROLL (@drkuttysiva) November 7, 2022