மறைவிற்கு முன்பு KGF திரைப்படம் குறித்து வாழ்த்தி பதிவிட்ட புனீத்தின் வைரல் வீடியோ..

Puneeth rajkumar viral video about kgf film getting viral on social media

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கேஜிஎஃப். இப்படத்தின் முதல் பாகம் மொழியை கடந்து மக்கள் வரவேற்ப்பை பெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் 2ம் பாகம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

Puneeth rajkumar viral video about kgf film getting viral on social media

இப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபகாலமாக இந்தியாவில் பேன் இந்தியா என சொல்லும் அளவிற்கு வெற்றி படமாக மாறியுள்ளது. அப்படி சமீபத்தில் பாகுபலி, புஷ்பா, RRR வரிசையில் இணைந்துள்ள திரைப்படம் கேஜிஎப் 2.

Puneeth rajkumar viral video about kgf film getting viral on social media

கேஜிஎஃப் 2 10,000 திரையரங்குகளில் வெளியானது. கன்னட சினிமாவை கேஜிஎஃப்க்கு முன், பின் என ஒப்பிட்டு பார்க்கும் அளவிற்கு மாற்றியுள்ளது. இதையடுத்து தற்போது கன்னட சினிமாவின் மீது உலக சினிமா ரசிகர்களின் பார்வை விழ ஆரம்பித்துள்ளது.

Puneeth rajkumar viral video about kgf film getting viral on social media

இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான மறைந்த புனீத் ராஜ்குமார், இப்படத்தின் முதல் பாகம் வெளியான போது படக்குழுவினர் அனைவரையும் பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

Puneeth rajkumar viral video about kgf film getting viral on social media

ஆனால் தற்போது கேஜிஎஃப் 2 ரிலீஸாகும் போது அவர் இல்லாத நிலையில், முன்னதாக புனீத் வாழ்த்திப் பேசிய வீடியோ திடீரென வைரலாகி வருகிறது. கேஜிஎஃப் 2 படத்தின் இந்த வெற்றியைப் பார்க்க அவர் உயிரோடு இல்லையே என ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Share this post