இதெல்லாம் ரொம்ப OVER.. இவ்வளவு கேவலமா அசோக் செல்வன் நடந்துக்கிட்டாரா?.. திட்டி தீர்த்த பிரபலம்..!(Video)
போர் தொழில், ப்ளூ ஸ்டார் போன்ற அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் அசோக் செல்வன். இவர் 2 முதல் 3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக உருவாகி வரும் அசோக் செல்வனின் எமக்குத் தொழில் ரொமான்ஸ் படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த படத்தை பாலாஜி கேசவன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். முன்னதாக, சமீப காலமாக இயக்குனருக்கும் நடிகர்களுக்கும் இடையே நிறைய மனக்கசப்புகள் இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில், பேசிய தயாரிப்பாளர் திருமலை பிரமோஷனுக்கு கூட அசோக்செல்வன் வராததை கண்டித்து பேசி இருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் திருமலை நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை அவந்திகா இருவருமே இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்காததால் அதனை குறித்து தனது கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்து இருந்தார்.
மேலும், டப்பிங் பேசுவதற்கு முன்பே அசோக் செல்வன் மீதம் உள்ள தனது சம்பளத்தை கொடுக்குமாறு தனக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இதை தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் என்ன அடிமைகளா ? என்று கே ராஜன் கேள்வி எழுப்பினார். மேலும், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் இல்லை என்றால் நடிகர்களே இல்லை என்றும், கூறியிருந்தார்.