‘இப்பவே இப்டி பண்ற..' மனஸ்வியை மேடையில் கடிந்த ராஜன்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !

Producer k rajan scolds baby manasvi on stage video getting viral on social media

தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் கொட்டாச்சி. வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடன் படத்தில் இணைந்து காமெடி நடிகராக வலம் வந்தவர். சினிமா உலகில் தன்னை சிறந்த காமெடியனாக நிலைநிறுத்திக் கொள்ள பல போராட்டங்களை செய்து வந்த இவர், சமீப காலமாக படத்தில் காண முடியவில்லை.

Producer k rajan scolds baby manasvi on stage video getting viral on social media

இந்நிலையில் இவருடைய மகள் மானஸ்வி குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் ஆகி விட்டார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக மானஸ்வி நடித்து இருந்தார். இந்த படத்தில் மானஸ்வி நடிப்பு, அவரது expressions, டயலாக்ஸ் அனைத்தும் பாராட்டக்கூடிய வகையில் இருந்தது. முதல் படத்திலேயே மானஸ்வி மக்கள் மத்தியில் பிரபலமானார்.

Producer k rajan scolds baby manasvi on stage video getting viral on social media

பின்னர், சுட்டு பிடிக்க உத்தரவு, மோஹினி, இருட்டு, தர்பார், எனிமி, சித்திரை செவ்வானம், மாமனிதன், பட்டாம்பூச்சி என பல பிரபல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது, மஹா, The Legend, பத்து தல, கும்கி 2, கண்மணி பாப்பா, சதுரங்க வேட்டை 2, காக்கி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Producer k rajan scolds baby manasvi on stage video getting viral on social media

தற்போது ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகியிருக்கும் ‘மஹா’ படத்தில் மானஸ்வி நடித்து இருக்கிறார். ஜமீல் இயக்கியுள்ள இப்படத்தை ‘எட்ஸெட்ரா எண்டெர்டெய்ன்மெண்ட்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் மற்றும் ஒரு பாடல் வெளியானது.

Producer k rajan scolds baby manasvi on stage video getting viral on social media

மேலும் இந்த படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறது. குழந்தைகளை கடத்தி கொடூரமாக கொலை செய்யும் ஒரு சைக்கோ கொலைகாரனிடம் ஹன்சிகா குழந்தையும் மாட்டிக்கொள்கிறது. அந்த சைக்கோவிடம் இருந்து குழந்தையை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதே இந்த படத்தின் கதை.

Producer k rajan scolds baby manasvi on stage video getting viral on social media

இப்படத்தின் பிரெஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. இதில் மானஸ்வி பேசிய போது படக்குழு அனைவருக்கும் நன்றி தெரிவித்து இருந்தார். அப்போது அவரை அழைத்த தயாரிப்பாளர் ராஜன் ‘எல்லாருக்கும் நன்றி சொல்லிவிட்டு தயாரிப்பாளரை இப்பவே விட்டுட்டியே தயாரிப்பாளர் மதியழகன் பெயரை சொல்லவில்லை’ என்று செல்லமாக திட்ட, அதற்கு மானஸ்வி மன்னிப்பு கேட்டுவிட்டு அவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார். இந்த வீடியோவை கண்ட பலரும் குழந்தையிடம் கூட இப்படி பேசுவீர்களா என்று ராஜனை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Share this post