பணத்துக்காக தயாரிப்பாளரை நிர்வாணமாக்கி அடித்து உதைத்து சித்ரவதை.. யோகிபாபு படத்தால் ஏற்பட்ட பிரச்சனை
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பல பிரபலங்கள் தற்போது தங்களது வெற்றி திரைப்பயணத்தை நடத்தி வருகின்றனர். அப்படி அறிமுகமானவர் நடிகர் யோகி பாபு. ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றி வந்த இவர், சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் அமீர் நடிப்பில் வெளியான யோகி படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.
பாபு என்ற இவரது பெயர் அதன் காரணமாகவே யோகி பாபு என மாறியது. இதனைத் தொடர்ந்து, தில்லாலங்கடி, பையா, வேலாயுதம், ராஜபாட்டை, கலகலப்பு, அட்டகத்தி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, பிரபல முன்னணி நடிகர்கள் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மான் கராத்தே, வீரம், ஐ, காக்கி சட்டை, காக்க முட்டை, ஜாக்சன் துரை, குற்றமே தண்டனை, ரெமோ, மெர்சல், கோலமாவு கோகிலா, சர்க்கார், அயோக்கியா, கோமாளி, தர்பார், அரண்மனை 3, பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மண்டேலா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது, 10திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே திரைபடத்தில் யோகி பாபு நடித்திருந்தார். இப்படம் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது அளவிற்கு நடிப்பில் உருவாகி வரும் வாரிசு என்ற படத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார். அதேபோல் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் வெளியாகி இருந்த ரிப்பீட் ஷூ படத்தில் யோகி பாபு நடித்து இருந்தார்.
இந்த படத்தில் திலீபன், ரெடிங் கிங்சிலே, ஜார்ஜ் விஜய், ப்ரியா போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சாம் சிஎஸ் இசை அமைத்து இருக்கிறார். இந்த படத்தின் வெளியீடு தயாரிப்பாளரை நிர்வாணமாக்கி அடித்து உதைத்து சித்திரவதை செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தனி ஒருவன், மனம் கொத்தி பறவை, டோரா போன்ற பல படங்களில் படத்தொகுளராக பணியாற்றியவர் கோபி கிருஷ்ணா. இவர் சொந்தமாக படம் தயாரித்து கையை சுட்டுக் கொண்டதால் விநியோகஸ்தர் மதுராஜ் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார்.
விநியோகஸ்தர் மதுராஜ் யோகி பாபு நடித்திருக்கும் ஷூ படத்தின் ஓடிடி, டிஜிட்டல் மற்றும் வெளிமாநில வெளியீட்டு உரிமையை வாங்கி இருக்கிறார். இதற்காக ஷூ படத்தின் தயாரிப்பாளரான கார்த்திக் என்பவர் உடன் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டு இருக்கிறார். முன் பணமாக 20 லட்சம் ரூபாயை மதுராஜ் கொடுத்திருக்கிறார். மீதமுள்ள பணத்தை படம் வெளியீட்டின் பிறகு இரண்டு தவணையாக தருவதாக மதுராஜ் கூறியிருக்கிறார். ஆனால், ஷூ படம் படுதோல்வி அடைந்ததால் எவரும் அந்த படத்தை வாங்க முன்வரவில்லை. இதனால் மதுராஜ் ஒப்பந்தப்படி பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்திருக்கிறார்.
இந்நிலையில், மதுராஜை தேடி அவருடைய அலுவலகத்திற்கு சில பேருடன் தயாரிப்பாளர் கார்த்திக் சென்று இருக்கிறார். அவர் அலுவலகத்தில் இருந்த கோபி கிருஷ்ணா, ஊழியர் பென்சர் ஆகியோரை பணய கைதி போல கடத்திச் சென்று நிர்வாணமாக்கி சித்திரவதை செய்திருக்கிறார். பின் மதுராஜிடம் பணம் கேட்டு மிரட்டி இருப்பதாக கூறப்படுகிறது. மதுராஜ் தன் மனைவியின் பிரசவத்திற்காக மதுரைக்கு வந்து விட்டதாக நழுவி இருக்கிறார். இதனால் கடத்தி சென்ற இருவரிடமிருந்து ஏடிஎம்களை பறித்து அதிலிருந்து சுமார் 70 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு கத்தியால் அவர்கள் இருவரையும் வெட்டி தாம்பரம் பகுதியில் கண்ணை கட்டி இறக்கிவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதில் கோபி கிருஷ்ணா தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பென்சரை காணவில்லை. அவர் என்ன ஆனார் என்பதும் தெரியவில்லை. இதையடுத்து சம்பவம் தொடர்பாக மதுராஜ் போலீசில் புகார் அளித்திருக்கிறார். விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில் ஷூ படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் பிரபல ரவுடியின் கூலிப்படை கும்பல் தான் இந்த கடத்தலில் ஈடுபட்டதாக தெரியவந்தது.
முதல் கட்டமாக இந்த கூலிப்படையில் தொடர்புடைய வினோத்குமார், நந்தகுமார், பாஸ்கரன், பிரசாத் ஆகியோரை போலீசார் கைது செய்து கடத்தல் கும்பல் பயன்படுத்திய கார், மூன்று செல்போன்களை பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றது. தலைமறைவாக உள்ள மீதமுள்ள ஆறு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்து தயாரிப்பாளர் கார்த்திக் இப்படியொன்றும் நடக்கவில்லை என்றும் தன்மீது பழி சுமத்தியிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும் தற்போது தயாரிப்பாளர் கார்த்திக் சிங்கபூரில் இருப்பதால் வேண்டுமென்றே யாரோ என் பெயரை கெடுக்க இப்படியான வேலையை செய்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.