அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் ? வெளியான தகவல் !

Priyanka mohan to pair up with dhanush in arun matheswaran film

கன்னட மொழி திரைப்படமான Ondh Kathe Hella என்னும் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன்.

இதனைத் தொடர்ந்து, இவருக்கு Nani’s Gang Leader என்னும் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Priyanka mohan to pair up with dhanush in arun matheswaran film

Sreekaram என்னும் தெலுங்கு மொழி திரைப்படத்தில் நடித்த இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் நடித்தார்.

இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துவிட்டார்.

Priyanka mohan to pair up with dhanush in arun matheswaran film

மேலும், சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் bold கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது, சிவகார்த்திகேயன் ஜோடியாக இவர் நடித்த டான் திரைப்படம் நடித்திருந்தார். டான் படத்தின் மூலம் இளசுகள் பலரது பேவரைட் ஆக மாறிவிட்டார்.

Priyanka mohan to pair up with dhanush in arun matheswaran film

இதுமட்டுமின்றி, நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு மகளாக நடிக்க பிரியங்கா கமிட்டாகியுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

Priyanka mohan to pair up with dhanush in arun matheswaran film

தற்போது, ரீசென்ட் க்ரஷ் ஆக மாறியுள்ள பிரியங்கா மோகன், அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட் ஆகி வருகிறார். M.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ள புதிய படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியானது.

Priyanka mohan to pair up with dhanush in arun matheswaran film

இந்நிலையில், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிக்கவிருக்கும், கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா மோகனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Priyanka mohan to pair up with dhanush in arun matheswaran film

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை ராக்கி, சாணி காயிதம் போன்ற வித்தியாசமான திரைக்கதைகளை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.

Priyanka mohan to pair up with dhanush in arun matheswaran film

Share this post