'ஆஸ்கர் வென்ற RRR.. ஒரு தமிழ் படம்..' பிரியங்கா பேட்டியால் கடுப்பான ரசிகர்கள்..!

priyanka chopra about RRR movie interview getting viral

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்து பிரியங்கா, தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

priyanka chopra about RRR movie interview getting viral

2018ம் ஆண்டு பிரபல பாடகரான நிக் ஜோனாசை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தன்னை விட சிறிய வயது கொண்டவர் நிக் ஜோனஸ் என்றாலும் நீண்ட நாள் காதலில் இருந்து இருவரும் திருமணம் செய்து கொண்டார்.

priyanka chopra about RRR movie interview getting viral

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாடகைத் தாய் மூலம் தனது முதல் குழந்தையை பெற்றெடுத்தார்.

priyanka chopra about RRR movie interview getting viral

இந்நிலையில், இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் RRR திரைப்படம் குறித்து பேசியுள்ளது செம வைரலாகி வருகிறது. பாகுபலி படத்தின் 2ம் பாகத்திற்கு பின் இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான திரைப்படம் RRR. ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ராகுல் பட், அலிசான் டூடி போன்ற பல நடிகர்கள் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது.

priyanka chopra about RRR movie interview getting viral

இப்படம் வெளியாகி இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக, ‘நாட்டு நாட்டு’ பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது மட்டுமின்றி, சமீபத்தில் நடந்த 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.

priyanka chopra about RRR movie interview getting viral

இந்நிலையில், RRR படம் குறித்து பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டியில், அவரிடம் பேசியவர், RRR என்ற பாலிவுட் திரைப்படம் என்று கூறும் போது உடனே அவர், இல்லை அது ஒரு தமிழ் திரைப்படம் என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேசியிருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி இருக்கிறது. இதை பார்த்த நெட்டிசன்கள்பலரும், RRR ஒரு தெலுங்கு படம் என்று கூட தெரியாமல் பிரியங்கா சோப்ரா இருக்கிறாரா? என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.

Share this post