சீச்சீ.. ரொம்பவே மோசமா கமெண்ட் போடுறீங்க.. மனசு தாங்கல புலம்பி தள்ளும் பிரியா பவானி சங்கர்..!
விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இதையடுத்து, இவர் மேயாத மான் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுத்தார்.
இதனை அடுத்து, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் வளம் வந்து கொண்டிருக்கிறார். தனது கல்லூரி காலத்தில் காதலித்து வரும் ரத்தினவேலுடன் விரைவில் திருமணம் செய்ய போகிறேன். சோம்பேறித்தனத்தினால் தான் திருமணத்தை தள்ளி போட்டதாகவும், திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும் என்றும், டிமான்டி காலனி 2 படத்தின் ப்ரோமோஷன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும், வதந்தி செய்திகளையும் மற்ற நடிகர்களுடன் சேர்த்து வைத்து பேசுவது குறித்தும் பேசி இருந்தார். அதில், ஹாப்பி பர்த்டே போஸ்ட் போட்டாலே போதும் எனக்கும் அந்த ஹீரோவுக்கும் இடையே காதல் என்று எழுதுறாங்க.. ஹரிஷ் கல்யாண், அசோக்செல்வனுடன் எடுத்த போட்டோ போட்டால் அப்படி பேசுறாங்க.. நல்லவேளை இருவருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. யாரோட போட்டோ எடுத்து போட்டால், அவங்களோட போயிருவேன்னு எப்படித்தான் நினைக்கிறீர்களோ, ரொம்ப மோசமான கமெண்ட்களை போடுறீங்க .. மனசு தாங்க மாட்டேங்குது என்று பிரியா பவானி சங்கர் அந்த பேட்டியில் புலம்பி இருந்தார்.