18 வயதில் உருவான ஆசை இது.. கனவு நிறைவேறித்து குறித்து பிரியா பவானி சங்கரின் நெகிழ்ச்சி பதிவு.!

priya bhavani shankar happy post on her new house warming ceremony pictures with her boyfriend confuses fans

தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளர்கள் என அனைவரும் தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து புகழடைந்து வருகின்றனர். அந்த வகையில், புதிய தலைமுறை முதல் பல பிரபல செய்து சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.

priya bhavani shankar happy post on her new house warming ceremony pictures with her boyfriend confuses fans

இதனைத் தொடர்ந்து, இவரது புகைப்படங்கள் பெரிதும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வந்தது. செய்தி வாசிப்புக்காகவே இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வந்தது. அதனைத் தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் தொடரில் நடித்து வந்தார். அதன் பின்னர், திரையுலகில் வைபவ் ஜோடியாக மேயாத மான் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.

priya bhavani shankar happy post on her new house warming ceremony pictures with her boyfriend confuses fans

இப்படத்திற்கு பல விருதுகள் பெற்ற இவர், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம், கசடதபற, ஓ மணப்பெண்ணே போன்ற திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இது மட்டுமின்றி, டைம் என்ன பாஸ் என்னும் வெப் சீரீஸ் தொடரில் நடித்துள்ளார்.

priya bhavani shankar happy post on her new house warming ceremony pictures with her boyfriend confuses fans

சமீபத்தில், திருச்சிற்றம்பலம், ஹாஸ்டல் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தார். இதுமட்டுமின்றி, மேலும் அகிலன், குருதி ஆட்டம், பொம்மை மற்றும் சில திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார். படங்களில் பிஸியாக இருந்தாலும் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர், தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது, அவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

priya bhavani shankar happy post on her new house warming ceremony pictures with her boyfriend confuses fans

இந்நிலையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான பதிவில் தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு 18 வயதில் இருந்தே இது எங்களுடைய ஆசை என பதிவிட்டுள்ளார். இதனை சிலர் அவரது திருமண அறிவிப்பு என வாழ்த்தி பதிவிட்டு வந்த நிலையில், “18 வயதில் ஆசைப்பட்டு தற்போது நமது புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கப் போகிறோம்” என தனது புது வீடு பற்றி தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை இணைத்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருப்பதாக மீண்டும் விளக்கமளித்து பதிவை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

priya bhavani shankar happy post on her new house warming ceremony pictures with her boyfriend confuses fans

Share this post