நயன் - விக்கி உண்மை திருமணம் தேதி.. சர்ச்சையில் சிக்கிய மருத்துவமனை.. தமிழக அரசின் அறிக்கை இதோ!

press release about vignesh shivan and nayanthara surrogacy twin babies procedure

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

press release about vignesh shivan and nayanthara surrogacy twin babies procedure

கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.

press release about vignesh shivan and nayanthara surrogacy twin babies procedure

கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.

press release about vignesh shivan and nayanthara surrogacy twin babies procedure

மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆகி வந்தது. திருமணம் முடிந்த கையோடு கோவில், கேரளா, தேனிலவு சென்றது என அனைத்து புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது.

press release about vignesh shivan and nayanthara surrogacy twin babies procedure

இந்நிலையில், அக்டோபர் 9ம் தேதி, திடீரென விக்னேஷ் சிவன் தனது அதிகாரப்பூர்வ சமூகவலைத்தள பக்கத்தில், நயனும் நானும் அப்பா அம்மா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என போட்டோவுடன் அறிவித்தார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

press release about vignesh shivan and nayanthara surrogacy twin babies procedure

கர்ப்பமாக நயன்தாரா இல்லை, திருமணம் முடிந்து 4 மாதங்களே ஆகியுள்ளது, அப்புறம் எப்படி என ரசிகர்கள் முதல் அனைவரும் குழம்பிய நிலையில், இவர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதாக தகவல்கள் வெளியானது. இது தான் பெரிய சர்ச்சையை உருவாக்கி, சமூக வலைத்தளங்களில் பெரும் வைரல் ஆனது.

press release about vignesh shivan and nayanthara surrogacy twin babies procedure

இதற்கு முறையான விளக்கத்தையும், 5 வருடங்களுக்கு முன் பதிவு திருமணம் செய்துள்ளதாகவும் அவர்கள் ஆதாரங்கள் சமர்பித்ததாக தகவல்கள் வெளியானது. மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அவர்களால் 13.10.2022 உயர்மட்ட விசாரணை குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

press release about vignesh shivan and nayanthara surrogacy twin babies procedure

இந்த விசாரணை குறித்து தற்போது அரசு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

press release about vignesh shivan and nayanthara surrogacy twin babies procedure

press release about vignesh shivan and nayanthara surrogacy twin babies procedure

press release about vignesh shivan and nayanthara surrogacy twin babies procedure

Share this post