பாண்டியன் ஸ்டோர்ஸில் மாற்றப்பட்ட பிரபல நடிகர்.. இனி இவருக்கு பதில் இவர் !

prashanth character is getting actor changed in pandian stores serial

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அப்படி, பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஒன்று.

prashanth character is getting actor changed in pandian stores serial

அண்ணன் - தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அப்படி தமிழில் உருவாக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்கள் வரவேற்பினால் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

prashanth character is getting actor changed in pandian stores serial

3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடருக்கும் இத்தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் விஜய் டெலிவிஷன் விருது கிடைத்தது. இந்த காலத்தில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயம் தொடர்பாக கதை சென்று கொண்டிருப்பதால், ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க தொடங்கியுள்ளனர்.

prashanth character is getting actor changed in pandian stores serial

மேலும், ஒரு கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் எதிர்பாராத சண்டைகள் வாக்குவாதங்கள் என சில பிரச்சனைகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலும் எழுந்து வருகிறது. இதில் நடிக்கும் ஸ்டாலின், சுஜாதா, வெங்கட், ஹேமா, குமரன், காவ்யா ஆகியோர்களின் நிஜப்பெயர்களை மறந்து மூர்த்தி-தனம், ஜீவா-மீனா, கதிர்-முல்லையாகத் தான் அனைவருக்கும் தெரியும். அந்த அளவிற்கு இந்த தொடர் மக்கள் மனதில் பதிந்துவிட்டது.

prashanth character is getting actor changed in pandian stores serial

இந்த சீரியலின் மூலமாக மிகப்பெரிய பிரபலமானவர் வி.ஜே. சித்ரா. அவர் கடந்த ஆண்டு மர்மமான முறையில் இறந்து விட்டதால், அவருக்கு பதிலாக காவ்யா முல்லையாக நடித்து

prashanth character is getting actor changed in pandian stores serial

வந்தார். சமீபத்தில், முல்லையாக நடித்து வந்த காவ்யா அறிவுமணி தான் இந்த தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்து இருந்தார். திரைப்படங்களில் வாய்ப்புகள் வர தொடங்கியதால் இவர் விலகியதாக கூறப்படுகிறது. இதனால், தற்போது லாவண்யா அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

prashanth character is getting actor changed in pandian stores serial

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடங்கியது முதல் தற்போது வரை, முல்லை, ஐஸ்வர்யா, ஜனார்த்தனன் என நிறைய நடிகர்கள் மாற்றங்கள் நடந்துள்ளது. அப்படி தற்போது, இந்த தொடரில் மல்லியின் மகனாக பிரசாந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் வசந்த். தற்போது மல்லி தன்னுடைய மகன் பிரசாந்த்திற்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். பிரசாந்திற்கும், மீனாவின் தங்கை சுவேதாவிற்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்கிறார்கள்.

prashanth character is getting actor changed in pandian stores serial

இதனால் அவருடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இவருக்கு பதிலாக பிரசாந்த் கதாபாத்திரத்தில் சுப்பிரமணியன் என்பவர் நடிக்க இருக்கிறார். சின்னத்திரை மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மகேஷ் சுப்ரமணியன். இவர் பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு தொடரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

prashanth character is getting actor changed in pandian stores serial

Share this post