'யுவன் ஷங்கர் ராஜா ஒரு Fraud'.. தீயாக பரவும் 'லவ் டுடே' பிரதீப்'ன் பேஸ்புக் பதிவு..
2019ம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கோமாளி. பள்ளி கூடத்தில் படிக்கும் போது எதிர்பாராத விபத்தில் சிக்கி கோமா வரை சென்று தனது வாழ்க்கையில் 16 வருடம் கோமாவில் இருந்து வெளியேறும் மனிதனுக்கு இந்த உலகம் எப்படி இருக்கும் என்பதனை சுவாரசியமாக சொல்லியிருப்பார்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கிய முதல் திரைப்படமான கோமாளி பாக்ஸ் ஆபிஸில் ரூ. 76 கோடி வரை வசூல் செய்திருந்தது. தற்போது பிரதீப் இயக்கம் மற்றும் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் லவ் டுடே. ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார்.
சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்துள்ளனர். நல்ல பொழுதுபோக்கு படமாக மட்டுமல்லாது இந்த காலத்து காதலை பிரதிபலிப்பதாக கூறியுள்ளனர்.
காதல் ஜோடி ஒருவருக்கு ஒருவர் போனை மாற்றிக்கொண்ட பின் நடக்கும் மோதல்களை நகைச்சுவை கலந்து சொல்லியுள்ள படம் தான் லவ் டுடே. முதல் பாதி முழுக்க காமெடி, இரண்டாம் பாதி முழுக்க எமோஷன் என பக்கா கமர்சியல் பேக்கேஜ் ஆக இப்படத்தை இயக்கியுள்ளார் பிரதீப். இன்றைய கால இளைஞர்களின் வாழ்வோடு ஒத்துபோகக்கூடிய கதை என்பதால் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி உள்ள இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், யார் என்பதை தெரிந்துகொள்ள இவரின் சமூக வலைதளங்களை நெட்டிசன்கள் நோட்டம் விட தொடங்கி, இவர் போட்ட பழைய ட்வீட்டுகள் ஒவ்வொன்றாக வெளியாகி வைரலாகி வருகின்றன. அண்மையில் விஜய்யின் ஜில்லா படத்தை விமர்சித்து அவர் கடந்த 2014ம் ஆண்டு போட்ட டுவிட் வைரலானது.
இந்நிலையில், அவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை திட்டி போட்ட பழைய ட்வீட்டுகளை தேடி எடுத்து நெட்டிசன்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர். அதன்படி கடந்த 2010ம் ஆண்டு “யுவன் சங்கர் ராஜா வேஸ்ட், ஃபிராடு” என ஒரு பதிவை போட்டுள்ளார். அதேபோல் 2012ம் ஆண்டு போட்டுள்ள ஒரு பதிவில் யுவன் மங்காத்தா பட தீம் மியூசிக்கை காப்பி அடித்துள்ளதாக கூறி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இந்த இரண்டு பதிவுகளை பார்த்த நெட்டிசன்கள் பிரதீப் ரங்கநாதனை வறுத்தெடுத்து வருகின்றனர். லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பின்னர் யுவன் என் படத்திற்கு இசையமைப்பார் என கனவில் கூட நினைத்ததில்லை என பிரதீப் நெகிழ்ச்சியாக பேசியிருப்பதையும் இவரது பழைய ட்வீட்களையும் வைத்து வறுத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சின்ன வயசுல தெரியாம ஏதாவது சொல்றதுதான் அத வச்சி troll பண்றது சரி இல்ல pic.twitter.com/YdKO7irGN3
— black cat (tribal) (@Cat__offi) November 16, 2022