தீயாய் பரவும் பழைய பதிவு.. பேஸ்புக் பக்கத்தை டியாக்டிவேட் செய்ததற்கு விளக்கமளித்த பிரதீப் ரங்கநாதன்..

pradeep ranganathan explains about old post that were getting viral on social media

2019ம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கோமாளி. பள்ளி கூடத்தில் படிக்கும் போது எதிர்பாராத விபத்தில் சிக்கி கோமா வரை சென்று தனது வாழ்க்கையில் 16 வருடம் கோமாவில் இருந்து வெளியேறும் மனிதனுக்கு இந்த உலகம் எப்படி இருக்கும் என்பதனை சுவாரசியமாக சொல்லியிருப்பார்.

pradeep ranganathan explains about old post that were getting viral on social media

பிரதீப் ரங்கநாதன் இயக்கிய முதல் திரைப்படமான கோமாளி பாக்ஸ் ஆபிஸில் ரூ. 76 கோடி வரை வசூல் செய்திருந்தது. தற்போது பிரதீப் இயக்கம் மற்றும் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் லவ் டுடே. ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார்.

pradeep ranganathan explains about old post that were getting viral on social media

சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்துள்ளனர். நல்ல பொழுதுபோக்கு படமாக மட்டுமல்லாது இந்த காலத்து காதலை பிரதிபலிப்பதாக கூறியுள்ளனர்.

pradeep ranganathan explains about old post that were getting viral on social media

காதல் ஜோடி ஒருவருக்கு ஒருவர் போனை மாற்றிக்கொண்ட பின் நடக்கும் மோதல்களை நகைச்சுவை கலந்து சொல்லியுள்ள படம் தான் லவ் டுடே. முதல் பாதி முழுக்க காமெடி, இரண்டாம் பாதி முழுக்க எமோஷன் என பக்கா கமர்சியல் பேக்கேஜ் ஆக இப்படத்தை இயக்கியுள்ளார் பிரதீப். இன்றைய கால இளைஞர்களின் வாழ்வோடு ஒத்துபோகக்கூடிய கதை என்பதால் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

pradeep ranganathan explains about old post that were getting viral on social media

இந்நிலையில், இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி உள்ள இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், யார் என்பதை தெரிந்துகொள்ள இவரின் சமூக வலைதளங்களை நெட்டிசன்கள் நோட்டம் விட தொடங்கி, இவர் போட்ட பழைய ட்வீட்டுகள் ஒவ்வொன்றாக வெளியாகி வைரலாகி வருகின்றன. அண்மையில் விஜய்யின் ஜில்லா படத்தை விமர்சித்து அவர் கடந்த 2014ம் ஆண்டு போட்ட டுவிட் வைரலானது.

pradeep ranganathan explains about old post that were getting viral on social media

இந்நிலையில், அவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை திட்டி போட்ட பழைய ட்வீட்டுகளை தேடி எடுத்து நெட்டிசன்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர். அதன்படி கடந்த 2010ம் ஆண்டு “யுவன் சங்கர் ராஜா வேஸ்ட், ஃபிராடு” என ஒரு பதிவை போட்டுள்ளார். அதேபோல் 2012ம் ஆண்டு போட்டுள்ள ஒரு பதிவில் யுவன் மங்காத்தா பட தீம் மியூசிக்கை காப்பி அடித்துள்ளதாக கூறி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

pradeep ranganathan explains about old post that were getting viral on social media

இந்த இரண்டு பதிவுகளை பார்த்த நெட்டிசன்கள் பிரதீப் ரங்கநாதனை வறுத்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய முகநூல் பக்கத்தை முழுவதுமாக செயலிழக்க செய்யவே, அதற்கும் நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். மேலும், இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தற்போது இந்த சம்பவத்திற்கு ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார்.

pradeep ranganathan explains about old post that were getting viral on social media

அதாவது, தற்போது பரவி வரும் பல பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டவை.ஒரு வார்த்தையை மாற்றினால் கூட பல விஷயங்கள் மாறும் என்பதால் என் முகநூல் கணக்கு செயலிழக்கப்பட்டுள்ளது. விஷயங்களை மாற்ற முயற்சிப்பவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை, மாறாக மக்கள் என்னை எவ்வளவு ஆதரிக்கிறார்கள் என்பதைக் காட்டியதற்கு அவர்களுக்கு நன்றி என்றும், மேலும் அதில் சில பதிவுகள் உண்மையானவை தான்.

pradeep ranganathan explains about old post that were getting viral on social media

ஆனால் கசப்பான வார்த்தைகள் கொண்ட பதிவுகள் போலியானவை. நான் தவறு செய்துவிட்டேன், வயதுக்கு ஏற்ப நாம் அனைவரும் வளர்ந்து கற்றுக்கொள்கிறோம், அதை சரிசெய்ய முயற்சித்தேன். நான் இன்னும் ஒவ்வொரு நாளும் ஒரு சிறந்த மனிதனாக மாற முயற்சிக்கிறேன் என்று அவர் பதிலளித்துள்ளார். வளர்ந்து வரும் ஒரு இளம் இயக்குனரின் இந்த செயலானது பலருக்கு விமர்சனம் செய்ய தூண்டினாலும், பலரும் அவருக்கு ஆதரவான கருத்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.

pradeep ranganathan explains about old post that were getting viral on social media

Share this post