ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்ட காமெடி.. வெளிப்படையாக பதில் அளித்த பிரதீப்!

pradeep opens up about comali copied comedy scene from hollywood movie video getting viral

2019ம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கோமாளி. பள்ளி கூடத்தில் படிக்கும் போது எதிர்பாராத விபத்தில் சிக்கி கோமா வரை சென்று தனது வாழ்க்கையில் 16 வருடம் கோமாவில் இருந்து வெளியேறும் மனிதனுக்கு இந்த உலகம் எப்படி இருக்கும் என்பதனை சுவாரசியமாக சொல்லியிருப்பார்.

pradeep opens up about comali copied comedy scene from hollywood movie video getting viral

பிரதீப் ரங்கநாதன் இயக்கிய முதல் திரைப்படமான கோமாளி பாக்ஸ் ஆபிஸில் ரூ. 76 கோடி வரை வசூல் செய்திருந்தது. தற்போது பிரதீப் இயக்கம் மற்றும் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் லவ் டுடே. ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார்.

pradeep opens up about comali copied comedy scene from hollywood movie video getting viral

சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்துள்ளனர். நல்ல பொழுதுபோக்கு படமாக மட்டுமல்லாது இந்த காலத்து காதலை பிரதிபலிப்பதாக கூறியுள்ளனர்.

pradeep opens up about comali copied comedy scene from hollywood movie video getting viral

காதல் ஜோடி ஒருவருக்கு ஒருவர் போனை மாற்றிக்கொண்ட பின் நடக்கும் மோதல்களை நகைச்சுவை கலந்து சொல்லியுள்ள படம் தான் லவ் டுடே. முதல் பாதி முழுக்க காமெடி, இரண்டாம் பாதி முழுக்க எமோஷன் என பக்கா கமர்சியல் பேக்கேஜ் ஆக இப்படத்தை இயக்கியுள்ளார் பிரதீப். இன்றைய கால இளைஞர்களின் வாழ்வோடு ஒத்துபோகக்கூடிய கதை என்பதால் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

pradeep opens up about comali copied comedy scene from hollywood movie video getting viral

இந்நிலையில், சமீபத்தில் பிரதீப் அளித்த பேட்டி ஒன்றில், அதில் அவரிடம், நீங்கள் எதாவது பட காட்சியை இதுவரை காப்பி பண்ணி இருக்கிறீர்களா? என்று கேட்டிருந்தார்கள். அதற்கு பிரதீப் ரங்கநாதன் கூறியது, காப்பி பண்ணி இருக்கிறேன். கோமாளி படத்தில் ஒரு காட்சி மட்டும் இங்கிலீஷ் படத்தில் இருந்து எடுத்து பண்ணேன். அது எவ்வளவு பெரிய தப்பு என்பதை புரிந்து கொண்டேன். அதற்காக என்னை பயங்கரமாக வச்சி செய்து இருந்தார்கள்.

pradeep opens up about comali copied comedy scene from hollywood movie video getting viral

ஏனென்றால், அந்த ஒரு காட்சியை காப்பியடித்ததற்கு படமே இப்படித்தான் இவன் செய்திருப்பான் என்று பலர் மனதிலும் தோன்றியிருக்கு. என் நண்பரும் நீ இவ்வளவு சூப்பராக கதை எடுத்து அந்த ஒரு சீன் வைத்ததால் உன் மீதுள்ள மதிப்பு குறைந்து விடும் என்றெல்லாம் கூறினார்கள். அதற்கு பிறகு இனிமே காப்பியே அடிக்கக்கூடாது என்று முடிவு செய்தேன் என்று கூறியிருக்கிறார். இப்படி பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தில் காப்பி அடித்த காட்சி, வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Share this post