தளபதி 66ல் பிரபு தேவா.. இணையத்தில் வெளியான தகவல் !

Prabu deva to join thalapathy66 as choreographer on request

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும், ரசிகர்கள் நடுவே நல்ல வசூல் பெற்றது. இப்படம் தியேட்டரில் ரெஸ்பான்ஸ் குறையவே, தற்போது OTTயில் வெளியாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தளபதி66. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் தளபதி66.

மேலும், முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இப்படத்தின் ஷூட்டிங்காக விஜய் ஹைதராபாத் செல்லும் ஏர்போர்ட் வீடியோ ஒன்று வைரல் ஆனது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் செய்யவுள்ளதாக தகவல் வந்தது.

Prabu deva to join thalapathy66 as choreographer on request

இதனைத் தொடர்ந்து, கடந்த வாரம், இப்படத்தில், சரத்குமார், ஷ்யாம், நடிகர் பிரபு, யோகி பாபு, சங்கீதா, ஜெயசுதா, பிக் பாஸ் சம்யுக்தா மற்றும் பிரகாஷ் ராஜ் இணைவதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்பில், இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக சொல்லப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க செண்டிமெண்ட் கதையாக இப்படம் உருவாகவுள்ளது. இந்நிலையில், புதிய தகவலாக விஜய்66 பாடல் ஒன்றுக்கு பிரபுதேவா கோரியோகிராஃப் செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இவர் ஏற்கனவே விஜய்யின் வில்லு, போக்கிரி படத்தில் விஜயை கோரியோகிராஃப் செய்துள்ளார். விஜய் 66ல் ஒரு பாடலுக்கு சோஃபி மாஸ்டரும், இன்னொரு பாடலுக்கு பிரபு தேவாவும் கோரியோகிராஃப் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு விஜய் தான் பிரபு தேவா வேண்டும் என கேட்டதாவும் தகவல் வெளியாகியுள்ளது.

Prabu deva to join thalapathy66 as choreographer on request

Share this post