ரமலத் - நயன்தாரா… ஒரே நேரத்தில் இரண்டு பேருடன் அதற்கு ஆசைப்பட்ட பிரபுதேவா!
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா இன்று இந்த இடத்தை பிடிப்பதற்கு முன்னர் அவர் பல சர்ச்சைகளையும் பல்வேறு தோல்விகளையும் அவமானத்தையும் சந்தித்துதான் இந்த உயரத்தை எட்டி இருக்கிறார்.
ஆம், குறிப்பாக காதல் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா மிகவும் மோசமாக மக்களால் விமர்சிக்கப்பட்டார். இவர் பிரபுதேவா மற்றும் சிம்பு இவர்களை காதலித்து காதல் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. பிரபுதேவாவை தான் நடிகை நயன்தாரா உருகி உருகி காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார் .
இதனிடையே பிரபுதேவாவின் முதல் மனைவியான ரமலத் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நயன்தாரா அவரை விட்டு பிரிந்து விட்டார். இந்நிலையில் நயன்தாரா ஏன் பிரிந்தார் என்பது குறித்து தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறது. அதாவது நடிகர், டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா நடிகை நயன்தாராவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் மூன்று கண்டிஷன்களை போட்டாராம்.
அதில் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவரான நடிகை நயன்தாரா இந்து மதத்திற்கு மாற வேண்டும் என கூறி இருக்கிறார். இரண்டாவது கண்டிஷன் ஆக நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கமே தலை காட்டக்கூடாது என கூறினாராம் அதற்கும் ஓகே சொன்னாராம் நயன்தாரா.
மூன்றாவது கண்டீஷனாக என்னுடைய முதல் மனைவி மற்றும் அவருடைய குழந்தைகள் என்னுடன் தான் இருப்பார்கள். அதற்கு நீ எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்க கூடாது என்றாராம். இதனால் தான் நடிகை நயன்தாரா அது என்னால் அறவே முடியாது எனக்கூறி அவரை விட்டு ஓடி வந்து விட்டார் என செய்திகள் கூறுகிறது.