நெஞ்சை நொறுக்கிய நிலச்சரிவு.. பெரும் தொகையை நிவாரண நிதியாக வழங்கிய நடிகர் பிரபாஸ்..!

prabhas-donated-two-crores-to-wayanad-landslides

கேரளாவில் வயநாட்டில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் 3 கிராமங்கள் அப்படியே மண்ணுக்குள் புதைந்து போனது சமூக வலைதளங்களில் வெளியாகி உலக அளவில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இந்த நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 400 ஐ கடந்துவிட்டது. இன்னும் நிறைய பேர் மண்ணுக்குள் புதைந்திருப்பதாக கூறப்படுவதால், தேடுதல் பணி ஒரு வாரத்தை கடந்தும் நடந்து கொண்டிருக்கிறது. மீண்டும் மக்களுக்கு உதவவும், அங்கு மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும் நாடு முழுவதிலும் இருந்து கேரளா முதல்வர் நிவாரண நிதிக்கு பல்வேறு சினிமா பிரபலங்களும் பல்வேறு தொழிலதிபர்களும் உதவிகளை செய்து வருகின்றனர்.

prabhas-donated-two-crores-to-wayanad-landslides

அந்த வகையில், தற்போது பாகுபலி நாயகன் பிரபாஸ் தன் பங்கிற்காக பெரும் தொகையை நிவாரண நிதியாக கொடுத்திருக்கிறார். அவர் ரூபாய் 2 கோடியை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. வயநாடு மக்களுக்கு உதவ பெரும் தொகையை நிவாரணமாக கொடுத்துள்ள நடிகர் பிரபாஸ்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Share this post