'வந்து கொண்டிருக்கிறேன் அதர்மத்தை சர்வநாசமாக்க..' ராமர் - சீதை - இராவணன் பற்றி வெளியானது 'ஆதிபுருஷ்' டீசர்!
‘பாகுபலி’ படத்தில் வீரம் நிறைந்த அரசனாக நடித்து இந்திய திரையுலகையே ஆச்சர்யப்பட வைத்தவர் நடிகர் பிரபாஸ். தற்போது ராமாயண கதையை மையமாக வைத்து எடுப்பட்டுள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தில் ராமராக நடித்துள்ளார். பிரபாஸின் 22வது படமாக உருவாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தை இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ளார்.
ராமராக பிரபாஸ், சீதையாக பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன், ராவணனாக பாலிவுட் நடிகர் சைப் அலி கான் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கில் உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.
இந்நிலையில், நேற்று இப்படத்தின் டீசர் அயோத்தியில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டீசர் இதோ..
Share this post