பிரபாஸ் - அனுஷ்கா விரைவில் திருமணம்.. முக்கிய நபரின் ஆசை.. அப்போ கண்டிப்பா நடக்கும்.. வெளியான தகவல்
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படம் இந்திய அளவில் பல மொழிகளில் வெளியாகி பெரும் வசூல் சாதனைகளை செய்தது. தெலுங்கில் வெளியான முதல் பிரம்மாண்ட படம் என்ற அந்தஸ்தை பெற்ற இந்த படம் Pan இந்திய அளவில் வெற்றி பெற்றது.
இதில் பிரபாஸ், அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன், தமன்னா, சத்யராஜ், ராணா, நாசர் உட்பட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அவர்கள் கதாபாத்திரங்கள் தற்போது வரை பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. இப்படம் முதல் பிரபாஸும், அனுஷ்காவும் காதலித்து வருவதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் என்று சில வருடங்களாக கூறப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
சமீபத்தில் பிரபாஸின் பெரியப்பா கிருஷ்ணம் ராஜு தீடீரென மரணமடைந்தார். அவர் அனுஷ்காவுக்கும் பிரபாஸுக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று ஆசைபட்டாராம். ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட்டார்.
இதனால், அவருடைய மறைவுக்கு பின்பு கண்டிப்பாக இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. கிருஷ்ணம் ராஜு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தபோது, அனுஷ்கா மட்டும் சென்று அவரை சந்தித்ததாக தகவல் வெளியானது.
இதனால், பிரபாஸ் - அனுஷ்கா திருமணம் கண்டிப்பாக நடக்கும் என தெரிவிக்கின்றனர். அவர்களுடைய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பொறுத்திருந்து பார்ப்போம்.