கே.ஜி.எஃப் 3ல் இந்த பிரபல நடிகரா ? தரமான சம்பவமா இருக்கும் போலயே.. வைரலாகும் புகைப்படம்..!
2018ம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் கேஜிஎப். இப்படம் எதிர்பாராத அளவிற்கு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இப்படத்தின் 2ம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டது படக்குழு.
இதனைத் தொடர்ந்து, யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா என பிரபலங்கள் பட்டாளமே இணைந்து நடித்து வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் கோடிக்கணக்கில் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. மொழிகள் கடந்து பான் இந்தியா படமாக இப்படம் வெளியாகி ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர்.
இதனால், கேஜிஎப் படத்தின் அடுத்த பாகம் உருவாக இருப்பதை ஏற்கனவே அறிவித்துவிட்டனர் படக்குழு. ரசிகர்கள் மத்தியில் அந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
இந்நிலையில், சலார் என்னும் படத்தை கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வரும் நிலையில், அப்படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது கேஜிஎப் 3ல் பிரபாஸ் சில காட்சிகளில் இருப்பார் என தகவல் பரவி வருகிறது. யாஷ், பிரஷாந்த் நீல், பிரபாஸ் உள்ளிட்டோர் எடுத்த புகைப்படமும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.