'லியோ' படத்தில் இணையும் விக்ரம் பட நடிகர்..? LCU கன்பார்ம்.. எகிறும் எதிர்பார்ப்பு..!
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாகியுள்ளவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, 2வது முறையாக விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணையும் திரைப்படம் லியோ.
இப்படத்திற்கு கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத், ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சாவும், படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜ், ஸ்டண்ட் மாஸ்டராக அன்பறிவு பணியாற்றுகின்றனர்.
திரிஷா, பிரியா ஆனந்த், சத்யராஜ், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஸ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் என நட்சத்திர பட்டாளங்கள் சேர்ந்து இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை சென்னை மற்றும் மூணாறில் நடத்தி முடித்தனர். இந்நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது.
விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து, லியோ திரைப்படமும் LCU பாணியில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், இதனை உறுதி செய்யும் விதமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. லியோ திரைப்படத்தில் முக்கிய விக்ரம் பட பிரபலம் இணைய உள்ளது உறுதியாகியுள்ளது. அது நடிகர் பகத் பாசில் தான் என சொல்லப்படுகிறது. இதன் மூலம் லியோ திரைப்படம் LCU-வில் இணைவது உறுதியெனவும் சொல்லப்படுகிறது.