புஷ்பா 2 படத்தில் இணையும் பிரபல தமிழ் பட நடிகர் !

Popular tamil actor to join pushpa 2 movie

கடந்த 2021 டிசம்பர் மாதம் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் வெளியாகி செம ஹிட் ஆகிய திரைப்படம் புஷ்பா.

Popular tamil actor to join pushpa 2 movie

இப்படம் வருவதற்கு முன்பே, இதில் இடம்பெற்ற, ஹே சாமி, ஊ சொல்றியா மாமா, ஸ்ரீ வள்ளி போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Popular tamil actor to join pushpa 2 movie

அதிலும், அல்லு அர்ஜுன் உடைய வித்தியாசமான மேனரிசம், சமந்தாவின் ஐட்டம் சாங் என பிரபலங்கள் முதல் குழந்தைகள் வரை அதை பின்பற்றி வீடியோ பதிவிடுவது ரீல்ஸ் வீடியோ செய்வது என இருந்து வந்தனர். அதிலும், அல்லு அர்ஜுன் தாடியை கோதி வசனம் பேசும் ஸ்டைலும், தோளைத் தூக்கி நடக்கும் மேனரிசம் உலகளவில் ட்ரெண்ட் ஆனது.

Popular tamil actor to join pushpa 2 movie

வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. புஷ்பா இரண்டாம் பாகம் முதல் பாகத்தின் பட்ஜெட்டை விட அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகி வந்தது.

Popular tamil actor to join pushpa 2 movie

இந்நிலையில், புஷ்பா 2 படத்தில் நடிக்க வைக்க நிறைய நடிகர் நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், விஜய் சேதுபதியிடம் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது. விஜய் சேதுபதிக்காக முக்கிய போலீஸ் உயர் அதிகாரி வேடத்தை படத்தில் இணைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Popular tamil actor to join pushpa 2 movie

Share this post