'லியோ' படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ள பிரபல முன்னணி தமிழ் நடிகர்..? வைரலாகும் தகவல்..!

popular tamil actor to do cameo in leo vijay movie

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாகியுள்ளவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, 2வது முறையாக விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணையும் திரைப்படம் லியோ.

popular tamil actor to do cameo in leo vijay movie

இப்படத்திற்கு கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத், ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சாவும், படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜ், ஸ்டண்ட் மாஸ்டராக அன்பறிவு பணியாற்றுகின்றனர்.

popular tamil actor to do cameo in leo vijay movie

திரிஷா, பிரியா ஆனந்த், சத்யராஜ், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஸ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் என நட்சத்திர பட்டாளங்கள் சேர்ந்து இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை சென்னை மற்றும் மூணாறில் நடத்தி முடித்தனர். இந்நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது.

popular tamil actor to do cameo in leo vijay movie

விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து, லியோ திரைப்படமும் LCU பாணியில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், விக்ரம் பட பிரபலம் நடிகர் பகத் பாசில் LCU வில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

popular tamil actor to do cameo in leo vijay movie

இந்நிலையில், விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் கேமியோவாக சூர்யா நடித்ததை போலவே, லியோ திரைப்படத்தில் தனுஷ் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இருப்பினும் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை இது அதிகப்படுத்தியுள்ளது.

popular tamil actor to do cameo in leo vijay movie

Share this post