உடலை குறைக்க சென்று ஜிம் ட்ரைனரிடம் தன்னை பறிகொடுத்த பிரபல தென்னிந்திய நடிகை.. போலீசில் பரபரப்பு புகார்..
இந்த கொரோனா, லாக் டவுன் என வந்தது முதல் ஒர்க்-அவுட், ஜிம், டயட் என நடிகர்களை விட நடிகைகள் பிட்னஸ் ப்ரீக் ஆக மாறிவிட்டனர். இதனை அவர்கள் வீடியோ, போட்டோஸ் என தங்களது சமூக வலைதள பக்கங்கள் வாயிலாகவும் பதிவிட்டு காட்டி வருவது அனைவரும் அறிவர்.
அப்படி, பிட்னஸ்க்காக அணுகிய ட்ரைனர் தன்னை தவறாக பயன்படுத்திக் கொண்டதாக பிரபல தென்னிந்திய நடிகை போலீசில் புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமா நடிகைகள் சமீப காலமாக தங்களுக்கு தொல்லை கொடுக்கும் நபர்களைப் பற்றி வெளிப்படையாக பேசியும், சமூக வலைத்தளங்களில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர்.
அந்த வகையில் பல நடிகைகள் மீ டூ என்ற ஹாஸ்டேக்கை பயன்படுத்தி சமூக வலைதளத்தில் தங்களுக்கு நடந்த பிரச்சனைகள் குறித்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் சினிமா உலகில் மிகப்பெரிய சர்ச்சைகளும் வெடித்தது.
தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வந்த அந்த 24 வயது நடிகை, ஆதித்யா அஜய் கபூர் என்ற பிட்னஸ் ட்ரைலரிடம் சென்றுள்ளார். நாளடைவில் இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது பிறகு காதலாக மாறியது. ஆரம்ப காலகட்டத்தில் இனிமையான இருந்த காதல் உறவு போகப் போக திசை மாறி போக தொடங்கியுள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி அந்த 24 வயது இளம் நடிகையை ஆதித்யா அஜய் பலமுறை பயன்படுத்திக் கொண்டுள்ளார். ஆனால் போகப் போக ஆதித்யா அஜய் பல கொடுமைகளை செய்ய, அதைத் தாங்கிக் கொள்ள முடியாத இளம் நடிகை போலீசில் பரபரப்பாக புகார் கொடுத்துள்ளார்.
அவர் கொடுத்த புகாரில் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நண்பர் ஒருவர் வீட்டில் இருவரும் சந்தித்துள்ளார்கள். அதன் பிறகு, செல்போனில் மொபைல் நம்பரை பகிர்ந்து கொண்டதாகவும், பின்பு இருவரும் காதல் வலையில் விழுந்ததாகவும் கூறியுள்ளார். இளம் நடிகையை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஆசை வார்த்தையை கூறியுள்ளார். அதை நம்பி அந்த நடிகை அவர் செய்கைகளுக்கு அனுமதித்துள்ளார்.
மும்பையில் ஃபிட்னஸ் ட்ரைனர் வீட்டிற்கு எல்லா நடிகையும் சென்று வர ஆரம்பித்ததில் இளம் நடிகைக்கு அதிகமாக டார்ச்சர் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. பின்னர் அந்த ட்ரைனரிடம் இருந்து ஒதுங்கி இருந்தும் இளம் நடிகையை துரத்தி துரத்தி டார்ச்சர் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தான் சொல்லும் படி கேட்க வேண்டும் இல்லையெனில் குடும்பத்தில் உள்ள அனைவரையும் என்ன செய்வேன் என்று தெரியாது, உன் புகைப்படங்களையும் வெளியிடுவேன் என ஆதித்யா மிரட்டல் கொடுத்ததாக அந்த புகாரில் இளம் நடிகை கூறியுள்ளார்.
இந்த புகாரை பெற்றுக் கொண்ட மும்பை போலீஸ் ஆதித்யா அஜய் கபூரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள் அவர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.