அதிர்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்.. சமூக வலைத்தளத்தில் முன்னணி நிறுவனம் செய்த வேலை !

2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். இவர், இயக்குனர் செல்வராகவன் அவர்களின் தம்பி மற்றும் தயாரிப்பாளர் - இயக்குனர் கஸ்தூரி ராஜா அவர்களின் மகன் ஆவார்.
காதல் கொண்டேன், திருடா திருடி, சுள்ளான், புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென்ற தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், 3, வேலையில்லா பட்டதாரி, வடசென்னை, கர்ணன் போன்ற படங்கள் மூலம் செம ஹிட் ஆகிவிட்டார்.
நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்கள் எடுத்துவிட்டார். தனது திறமை மூலம் பல விமர்சனங்களையும் தாண்டி பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்து வருகிறார்.
ஒல்லியாக இருக்கும் இவனெல்லாம் ஹீரோவா என கேலி கிண்டல் பேசியவர்கள் தற்போது இவர் ஹாலிவுட், பாலிவுட் வரை சென்றது பார்த்து விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றிபெற்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார்.
தற்போது, செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம், டோலிவுட்டில் வாத்தி, ஹாலிவுட்டில் தி கிரே மேன், கேப்டன் மில்லர் என அடுத்தடுத்து பிசியாக இருந்து வருகிறார் தனுஷ்.
இந்த வருட தொடக்கத்தில் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவுடனான 18 வருட வாழ்க்கையை முடித்துள்ளதாக அறிக்கை வெளியிட்டார். அது அனைவருக்குமே அதிர்ச்சியாக தான் இருந்தது. விவாகரத்து பெற்ற தனுஷ் தனது மகன்களுடன் அவ்வப்போது அதிக நேரம் செலவிட்டு வருகிறார். மீண்டும் இருவரும் சேரப்போவதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், பிரபல நிறுவனம் ஒன்று சமூக வலைத்தளத்தில் செய்த வேலை தனுஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பிரபலங்களுக்கு ட்விட்டர் நிறுவனம் அதிகாரபூர்வ கணக்கு என்பதற்காக ஆய்வு செய்து Blue Tick வழங்குவது வழக்கமான ஒன்று.
அந்த வகையில், கோலிவுட் நடிகர்களில் ட்விட்டர் பக்கத்தில் 10.7 மில்லியன் என்ற எண்ணிக்கை வைத்திருக்கும் ஒரே நடிகர் தனுஷ், அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே Blue Tick வாங்கிவிட்டார். இந்நிலையில், தனுஷிற்கு கொடுத்திரு ப்ளூ நிற டிக்கை ட்வீட்டர் நிறுவனம் நீக்கியது.
இதனை பார்த்த தனுஷ் ரசிகர்களை அதிர்ச்சியடைந்தனர். தனுஷ் தமிழில் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து மொழிகளிலும் கலக்கி வரும் நிலையில், அவரது ட்விட்டர் கணக்கில் உள்ள புளூடிக் நீக்கப்பட்டது ஏன் என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். ரசிகர்கள் கேள்வி எழுப்பியதை பார்த்த ட்விட்டர் நிறுவனம் உடனடியாக சில மணி நேரத்திலேயே நீக்கிய அந்த ப்ளூ டிக்கை திரும்பி கொடுத்துவிட்டது.