மேடையில் பாடும்போதே உயிரிழந்த பிரபல பாடகர்.. வைரலாகும் வீடியோ.. அதிர்ச்சியில் திரையுலகினர் !

Popular singer edava basheer dies on stage while singing

கேரளாவைச் சேர்ந்த பின்னணி பாடகரான எடவா பஷீர் மலையாளத்தில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடி பிரபலம் அடைந்தவர்.

ஆலப்புழா அருகே பத்திரபள்ளியில் ப்ளூ டைமண்ட்ஸ் என்கிற இசைக்குழுவின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்துக்கான இசை நிகழ்ச்சி நடந்ததில் எடவா பஷீரும் பங்கேற்றார்.

Popular singer edava basheer dies on stage while singing

அந்நிகழ்ச்சியில் எடவா பஷீர் பல பாடல்களை பாடினார். அப்போது கே.ஜே.யேசுதாஸ் பாடிய இந்திப் பாடல் ஒன்றை அவர் பாடியபோது திடீரென மயங்கி விழுந்தார்.

Popular singer edava basheer dies on stage while singing

இதனால், பதட்டமடைந்து அனைவரும் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Popular singer edava basheer dies on stage while singing

கேரளாவின் வர்கலை பகுதியருகே எடவா என்ற இடத்தில் பிறந்தவர் பஷீர். தற்போது இவரது வயது 78. ஜேசுதாஸ், ரபி ஆகியோரின் பாடல்களை கேட்டு பயிற்சி பெற்றுள்ளார்.

பள்ளி, கல்லூரியில் பல பரிசுகளை வென்றுள்ள பஷீர், பின் தனது நண்பர்களுடன் இணைந்து அனைத்து கேரள இசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் தலைவராகவும் செயல்பட்டார்.

Popular singer edava basheer dies on stage while singing

பாடகர் எடவா பஷீர் திடீர் மறைவு மலையாள திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பாடகர் பஷீரின் மறைவுக்கு ஏராளமான திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேடையில் பாடிக் கொண்டிருக்கும் போதே பாடகர் எடவா பஷீர் உயிழ்ந்துள்ள சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Share this post