Viral Video: குடி போதையில் தாறுமாறாக கார் ஓட்டிய பிரபல சின்னத்திரை நடிகை.. மடக்கி பிடித்து கைது செய்த போலீஸ்!
மலையாள நடிகையான அஸ்வதி பாபு, சினிமா மற்றும் சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். சின்னத்திரையில் பிரபலமாக வலம் வந்த இவர், பல்வேறு சர்ச்சைகளில் அடுத்தடுத்து சிக்கினார். அதில் இளம் பெண்களை போதைக்கு அடிமையாக்கி, அவர்களை வைத்து அப்பார்ட்மெண்ட் ஒன்றில் விபச்சாரம் நடத்தி வந்ததாக விபச்சார வழக்கில் 2018ம் ஆண்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார் அஸ்வதி.
அதுமட்டும் இல்லாமல், சில ஆண்டுகளுக்கு முன் இவரது வீட்டில் போதை பொருள் இருப்பதாக திற்காக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் வீட்டுக்குச் சென்று போலீஸ் சோதனை செய்தபோது, அங்கு எம்டிஎம்ஏ என்ற போதை பொருள் வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அஸ்வதி மற்றும் அவரது கார் டிரைவர் பினோய் ஆபிரகாமும் கைது செய்யப்பட்டனர். பின் இவர்கள் பெங்களூரில் இருந்து போதைப் பொருளை கடத்தி வந்து இங்கு வைத்து பொருளை விற்று வந்தது தெரியவந்தது.
இப்படி பல வழக்கில் நடிகை அஸ்வதி பாபு சிக்கி இருக்கிறார். தற்போது மீண்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை அஸ்வதி தனது காதலன் நவுபல் உடன் குடி போதையில் காரில் சென்றுள்ளார். அப்போது இருவரும் அதிவேகமாக காரை ஓட்டியதாக கூறப்படுகிறது.
கொச்சி குசாட் சந்திப்பில் சென்றபோது அருகில் இருந்த தடுப்புச்சுவர் மீதும், சாலையோரம் சென்று கொண்டிருந்த பைக் மற்றும் கார் மீதும் உரசியபடி கார் சென்றதை பார்த்து பதறிப்போன அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பெயரில் அந்த காரை போலீசார் விரட்டிச் சென்று பிடித்துள்ளனர்.
சினிமா பாணியில் இறுதியில் அஸ்வதியின் காரை போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர். அப்போது தப்பித்து செல்ல முயன்றபோது அருகில் இருந்த கல் ஒன்றில் ஏறியதால் அவர்களது கார் டயர் வெடித்து சிதறி உள்ளது. இதனால் எங்கும் தப்பிக்க முடியாமல் இருவரும் சிக்கினர்.
பின்னர் காரில் இருந்து இறங்கி ஓடிய அவர்கள் இருவரும் ஒரு துணிக்கடைக்குள் சென்று பதுங்கிக் கொண்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை அழைத்து சென்றனர். விசாரணையில் அவர்கள் இருவரும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது உறுதியானதால் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இச்சம்பபம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.