Viral Video: பிக்பாஸ் 6ல் கலந்து கொள்ளவிருக்கும் பிரபல செய்தி வாசிப்பாளர்.. அவரே பேட்டியில் சொன்ன தகவல் !

Popular news reader to take part in biggboss season 6 tamil video getting viral

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று.

Popular news reader to take part in biggboss season 6 tamil video getting viral

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 6 சீசன் முடிந்துள்ளது. இந்நிலையில், ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை கமல் 3 வாரமும், மீதம் சிம்பு அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. இதையடுத்து, அடுத்த சீசன் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Popular news reader to take part in biggboss season 6 tamil video getting viral

OTT தள 24 மணி நேர ஷோவில் 5 சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் சிலர் பங்கேற்றனர். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை முதல் 3 வாரம் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், அரசியல், ஷூட்டிங் என பிசியாக இருப்பதால் விலகுவதாக கமல் கூறி விட்டு விலகவே, சிம்பு மீதமிருந்த வாரங்கள் தொகுத்து வழங்கினார்.

Popular news reader to take part in biggboss season 6 tamil video getting viral

அடுத்ததாக பிக்பாஸ் சீசன் 6 துவங்கப்பட்டால், அதில் தொகுப்பாளராக கமல்ஹாசன் வருவாரா? சிம்பு வருவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வந்த நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க நிறைய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Popular news reader to take part in biggboss season 6 tamil video getting viral

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கவதற்கான ஏற்பாடுகள் மற்றும் போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் துவங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது.

Popular news reader to take part in biggboss season 6 tamil video getting viral

மேலும், இதில் VJ ரக்ஷன், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜலட்சுமி, சுசித்ராவின் முன்னாள் கணவர் காரத்திக் குமார், இசையமைப்பாளர் டி இமானின் முன்னாள் மனைவி, டிடி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.

தற்போது புதிதாக செய்தி வாசிப்பாளர் ஒருவர் பிக் பாஸ் 6வது சீசனில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. பாலிமர் நியூஸ் சேனலில் பிரபல செய்தி வாசிப்பாளராக இருந்து வரும் ரஞ்சித் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய போது, நான் ஒரு ரியாலிட்டி ஷோவில் 40 நாட்கள் கலந்து கொள்ள இருக்கிறேன் என கூறியிருக்கிறார். அவர் கூறியதைப் பார்க்கும் போது மறைமுகமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தான் குறிப்பிட்டிருப்பதாக தெரிய வருகிறது.

Share this post