'என் மானமே போச்சு'.. போட்டோ லீக் செய்த இயக்குனர் மீது உச்சகட்ட கோபத்தில் மஹிமா நம்பியார் !
பாடல் மற்றும் நடன கலையை முழுவதும் முறையாக கற்று தேர்ந்தவர் நடிகை மஹிமா நம்பியார். இதன் நடுவே, இவருக்கு மலையாள மொழி திரைப்படமான Kaaryasthan என்னும் திரைப்படத்தில் ஒரு முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
திரைப்பட வாய்ப்புகளைத் தேடி சில விளம்பர படங்களிலும் நடித்து வந்த மஹிமா, சிந்து சமவெளி திரைப்பட வாய்ப்பை தனது சொந்த சில காரணங்களால் நிராகரித்துவிட்டார். பின்னர், சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான சாட்டை திரைப்படத்தில் நல்ல கதாபத்திரத்தில் நடித்ததன் மூலம் மிக பிரபலம் ஆனார்.
இதன் பின்னர் அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் நடித்த மஹிமா, என்னமோ நடக்குது, மொசக்குட்டி, அகத்திணை, குற்றம் 23, புரியாத புதிர், அண்ணாதுரை, கொடிவீரன், அண்ணனுக்கு ஜே, மகாமுனி, அசுரகுரு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதுமட்டுன்றி, சாந்தனு ஜோடியாக குண்டுமல்லி என்னும் மியூசிக் ஆல்பமில் நடித்துள்ளார். தற்போது, 2 தமிழ் மற்றும் 1 மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும், சோசியல் மீடியா பக்கத்தில் தனது ஹாட் மற்றும் க்யூட் போட்டோஸ் வீடியோக்களை பதிவிட்டு லைக்ஸ் அள்ளி வருகிறார்.
தற்போது இயக்குனர் சி.எஸ்.அமுதனின் அடுத்த படமான ரத்தம் படத்தில் விஜய் ஆண்டனியின் ஜோடியாக நடித்து வருகிறார் மஹிமா. அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. மொத்த படக்குழுவும் தாய்லாந்தில் ஷூட்டிங் நடத்தி கொண்டிருக்கும் நிலையில் அங்கு நடிகை தூங்கிக்கொண்டிருக்கும் போட்டோவை இயக்குனர் அமுதன் ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார்.
அதை பார்த்து அதிர்ச்சி ஆன மஹிமா “என் ஸ்டைல் போச்சு, மானம் போச்சு, மரியாதை போச்சு, எல்லாமே போச்சு. நான் இந்தியாவுக்கு திரும்பி போக விரும்பவில்லை” என தெரிவித்து இருக்கிறார். இதற்கு கிண்டலாக விஜய் ஆண்டனியும் கமெண்ட் செய்துள்ளார்.
அவங்க hardwork பன்றத பாக்கும் போது.
— vijayantony (@vijayantony) October 7, 2022
அப்புடியே என்ன பாக்குற மாறியே இருக்கு💪 https://t.co/NY2pVlPWoI