ஒரேடியாக மொத்த சீரியல்களையும் முடிவுக்கு கொண்டு வரும் பிரபல தமிழ் தொலைக்காட்சி.. இனி சீரியலே இல்லையாம்!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் தொலைக்காட்சி என பல்வேறு தொலைக்காட்சி சேனல்கள் இருந்து வருகின்றன. இந்த மூன்று சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இந்த மூன்று சேனல்களை தொடர்ந்து அடுத்ததாக ஒரு பிரபலமான தொலைக்காட்சி சேனலாக இருந்து வருவது கலர்ஸ் தமிழ். இந்த தொலைக்காட்சி சேனலில் தற்போது ஒரு சில சீரியல்கள் மட்டும் தான் ஒளிபரப்பாகி வருகின்றன.
இந்த தொலைக்காட்சி சேனலால் மற்ற முன்னணி சேனல்களுடன் போட்டி போட முடியாத காரணத்தினால் தற்போது அனைத்து சீரியல்களையும் முடிவுக்கு கொண்டு வந்து எல்லா நேரமும் திரைப்படங்களை ஒளிபரப்பும் வகையில் நான் ஃபிக்ஷன் ( Non-fiction ) தொலைக்காட்சி சேனலாக மாற்ற முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது வரை இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை இருந்தாலும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.