பிக் பாஸிலும் சரி, BB ஜோடியிலும் சரி என்ன இதுக்கு மட்டும் தான் கூப்பிட்டாங்க.. பிரபலத்தின் வைரலாகும் பேட்டி

சுப்ரமணியபுரம், நாடோடிகள், ஆடுகளம் உள்ளிட்ட படங்களில் மதுர, ஆடுங்கடா, ஒத்த சொல்லால போன்ற பிரபல திரைப்பட பாடல்களை பாடியதன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபல பாடகராக வலம் வருபவர். இதனைத் தொடர்ந்து, ஒத்த சொல்லால, வேணாம் மச்சான் வேணாம், கத்தரி பூவழகி போன்ற பல பிரபல பாடல்களை பாடியுள்ளார்.
இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். இதில் கலவையான விமர்சனங்களை பெற்றார். பின்னர், இதன் மூலம் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் ஜோடிகள் போட்டியாளராக பங்கேற்றார்.
இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் போட்டியாளராக, தாமரை – பார்த்தசாரதி, வேல்முருகன் - இசைவாணி, ஐக்கி - தேவ், அபிஷேக் - ஸ்ருதி, ஹாரத்தி - கணேஷ், சுஜா - சிவகுமார், அமீர்-பவானி மற்றும் பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டய கிளப்பி வந்தனர். இந்த நிகழ்ச்சி கடந்த மே மாதம் முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும், இந்த நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியை ராஜு மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கி வருகின்றனர். ரம்யா கிருஷ்ணன், சதீஸ் இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக பங்கேற்று வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சி இரண்டாவது எவிக்ஷன் நடந்து முடிந்ததில், நாட்டுப்புற பாடகர் வேல்முருகன்- இசைவானி ஜோடி வெளியேறினர். மேலும், இது தொடர்பாக வேல்முருகன் இடம் பேட்டி எடுத்தபோது அதில் அவர் கூறியிருந்தது ‘பிக் பாஸ் ஜோடிகள் என்று சொல்லிக் கூப்பிடும் போதே எப்படியும் முதல் இரண்டு வாரத்தில் வெளியேற்றி விட போகிறார்கள் என்று அவர்களிடமே நேரடியாக சொன்னேன்.
அது இப்போ நடந்து விட்டது. அவ்வளவு தான் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சரி, இப்ப இந்த நிகழ்ச்சியிலும் சரி ஒரு என்டர்டைன்மென்ட்காக தான் என்னைக் கூப்பிட்டு இருக்காங்க. ஆனால், நான் எப்பவும் எதையுமே சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. அது என் சுபாவம். இந்த இரண்டு அனுபவமே எனக்குக் கிடைத்த வாய்ப்பாக பார்த்தேன். அதில் என்னால் என்ன செய்ய முடியுமோ? அதை முழு ஈடுபாட்டுடன் செய்திருக்கிறேன்.
இந்த நிகழ்ச்சி கூட பாடகரான என்னை ஆட வைத்தது இல்லையா? அந்த கோணத்தில் நமக்கு சாதகமாக எடுத்துக்க வேண்டியது தான்’ என்று கூறியிருந்தார். இப்படி இவர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.