நித்யானந்தாவை சந்திக்க ரகசியமாக கைலாசா சென்றுவரும் பிரபல தமிழ் பட நடிகை.. இவங்களா ?
திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்த நித்யானந்தா, தனது இளம் வயது முதலே ஆன்மிகம், அது சார்ந்த பயணம் என தனது வாழ்க்கையை ஈடுபத்தி வந்தார். இதன் நடுவே, நடிகையுடன் தகாத உறவில் இருந்ததாக வெளியான வீடியோ மூலம் சர்ச்சையில் சிக்கினார். மேலும், ஆன்மீக ரீதியாக இவரிடம் வரும் பெண்களை, பாலியல் ரீதியில் உபயோகிப்பதாகவும், கட்டாய படுத்தி இருக்க வைப்பதாகவும் நிறைய புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.
இருப்பினும், இவரது பல சொற்பொழிவு வீடியோக்கள், ட்ரோல் வீடியோக்கள் என செம வைரலானது. நித்யானந்தா மீது பாலியல் பலாத்கார வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2018ம் ஆண்டு தலைமறைவான நித்யானந்தா, தனக்கென ஒரு தீவை விலைக்கு வாங்கி அந்த இடத்திற்கு கைலாசா எனப் பெயரிட்டு, அங்கு வசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நித்யானந்தாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. அடுத்த சில தினங்களில், ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என முகநூல் பதிவின் மூலம் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
ஆனாலும், நித்யானந்தா உடல் நலக்குறைவால் இருப்பதை அவர் வெளியிட்ட படங்களும், அவர் கடிதமும் உறுதி செய்தன. இதைத் தொடர்ந்து குருபூர்ணிமா அன்று நேரலையில் தோன்றிய நித்யானந்தா, வழக்கம் போல உற்சாகமாக உரையாற்றினார்.
இந்நிலையில், நித்யானந்தாவின் கைலாசாவிற்கு நடிகை கௌசல்யா அடிக்கடி சென்று வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளாக முதுகு வலி பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த கௌசல்யாவின் முதுகுவலியை நித்யானந்தா தான் சரி செய்ததாக கூறப்படுகிறது. அதனால் அவரின் தீவிர பக்தையாக மாறிய கௌசல்யா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
நடிகர்கள் விஜய்,பிரபுதேவா, முரளி உள்பட பலருடன் ஜோடியாக நடித்த அவர் தற்போது கதாநாயகர்களின் தாயாக திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் ரகசியமாக அடிக்க கைலாசாவிற்கு சென்று வருகிறார் என சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே நடிகை ரஞ்சிதாவால் பிரச்சினைக்குள்ளான நித்யானந்தாவை சந்திக்க நடிகை கௌசல்யா சென்று வருவது குறித்த தகவல் திரைப்படத்துறையினர் மத்தியில் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.