கார்த்தி படத்தில் இருந்து விலகிய பிரபல முன்னணி தமிழ் நடிகர்.. காரணம் இதுவா ?

Popular actor refuses to act in karthi next film news getting viral on social media

அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. இப்படத்தை தொடர்ந்து, ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மஹான் அல்ல, சிறுத்தை,கோ, சகுனி, தோழா, மெட்ராஸ் போன்ற பல வெற்றி திரைப்படங்களை தந்ததன் மூலம் தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

Popular actor refuses to act in karthi next film news getting viral on social media

கைதி, தம்பி, சுல்தான் போன்ற திரைப்படங்களை தொடர்ந்து, தற்போது விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் 1 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகிறது. இதை தொடர்ந்து, பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகிறது.

Popular actor refuses to act in karthi next film news getting viral on social media

இப்படத்தை தொடர்ந்து வருகிற தீபாவளிக்கு சர்தார் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், அடுத்ததாக ராஜு முருகன் இயக்கத்தில் புதிய படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார்.

Popular actor refuses to act in karthi next film news getting viral on social media

இப்படத்தில் வில்லனாக நடிக்க மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கமிட்டாகியிருந்ததாக ஒரு தகவல் வெளிவந்தது. ஆனால், தற்போது இப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டாராம். கால்ஷீட் இல்லாத காரணத்தினால் இப்படத்தில் விஜய் சேதுபதியால் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று தகவல் தெரிவிக்கின்றனர்.

Popular actor refuses to act in karthi next film news getting viral on social media

Share this post