நிகழ்ச்சி மேடையில் யாஷிகாவிடம் எல்லை மீறி முத்தம் கொடுத்து முகம் சுளிக்க வைத்த பிரபல நடிகர்.. வைரலாகும் வீடியோ..!

popular actor cool suresh misbehaves with yashika anandh in function stage video viral

சோஷியல் மீடியா மூலம் பிரபலம் அடைந்த யாஷிகா ஆனந்த் டெல்லியில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். பள்ளி பருவம் முதலே மாடலிங், நடிப்பு என பயணத்தை தொடங்கிய யாஷிகா, ஜீவா, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ‘கவலை வேண்டாம்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, துருவங்கள் பதினாறு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பாடம், மணியார் குடும்பம் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த இவர், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த கவர்ச்சி கதாபாத்திரத்தின் மூலம் இளசுகள் மனதில் இடம் பிடித்து மீம்ஸ் மற்றும் வீடியோக்கள் மூலம் இன்டர்நெட் சென்சேஷன் ஆனார்.

popular actor cool suresh misbehaves with yashika anandh in function stage video viral

இந்த வரவேற்பின் மூலம் பிக் பாஸ் சீசன் 2ல் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பிக் பாஸ்’ல் 5 லட்ச ரூபாய் பரிசு தொகை பெற்று, 5வது இடம் பிடித்த யாஷிகா, இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், zombie என்னும் படத்தில் நடித்தார்.

தற்போது, சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களையும், வீடியோக்களையும் அப்லோட் செய்து வருகிறார். மேலும், திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் கூல் சுரேஷ், யாஷிகா ஆனந்த் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் அவரது கையை பிடித்து தடவிவிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த 2 3 நாட்களாக தொகுப்பாளினி ஒருவரிடம் இவர் எல்லைமீறி நடந்து கொண்டதும், அதற்கு மன்னிப்பு கேட்டது குறித்தும் வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில், இவர் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருவதாக வீடியோவை பகிர்ந்துள்ளனர்.

Share this post