BIGG BOSS சீசன் 6 முதல் போட்டியாளர் இந்த பிரபல VJ ? இது நல்லா இருக்கே.. அப்போ இந்த சீசன் ஜாலியோ ஜிம்கானா தான் !
நெதர்லாந் நாட்டின் ‘பிக் பிரதர்’ நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியானது இந்தியாவில் முதலில் ஹிந்தியில் அறிமுகம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் என்று பல மொழிகளில் நடத்தப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 6 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை கமல் 3 வாரமும், மீதம் சிம்பு அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. இதையடுத்து, அடுத்த சீசன் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. OTT தள 24 மணி நேர ஷோவில் 5 சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் சிலர் பங்கேற்றனர்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை முதல் 3 வாரம் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், அரசியல், ஷூட்டிங் என பிசியாக இருப்பதால் விலகுவதாக கமல் கூறி விட்டு விலகவே, சிம்பு மீதமிருந்த வாரங்கள் தொகுத்து வழங்கினார். இதனால், இனி, கமல் ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டார் என பேசப்பட்டது.
ஆனால், யாரும் எதிர்பார்த்திராத நிலையில், விக்ரம் படத்திற்கு பிறகு கமல், விரைவில் பிக்பாஸ் சீசன் 6ல் அனைவரையும் சந்திப்பதாகவும் அறிக்கை வெளியிட்டார். தற்போது விக்ரம் படமும் ரிலீசாகி சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றது. உலகம் முழுவதும் 350 கோடிக்கும் மேல் வசூல் செய்து, கோலிவுட்டில் புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளது. இதையடுத்து, அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமல் கமிட்டாகி வருகிறார்.
இந்த சமயத்தில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பற்றிய புதிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜுன் மாத இறுதியில் துவங்கி அக்டோபர் மாதத்தில் முடிவடையும்.
லேட்டஸ்ட் தகவலின் படி, வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கப்பட உள்ளது. இதையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க போகிறார். இதற்கான, போட்டியாளர்கள் தேர்வு விரைவில் துவங்கப்பட உள்ளதாக அப்டேட் ஒன்று வெளியானது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க போட்டியாளர்கள் தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளராக இருந்து வரும் ரக்ஷன் தான் பிக்பாஸ் சீசன் 6ல் முதல் ஆளாக நுழையவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
கலக்கப்போவது யாரு சீசன் 5 6 7 உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரக்ஷன், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ரக்ஷன் கடந்த பிக்பாஸ் சீசன் 5 கலந்து கொள்ள முடியாமல் போனதை தொடர்ந்து, தற்போது பிக்பாஸ் 6ல் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறதாம்.