'சாகுற வரைக்கும் இனி இப்டி அவதிப்பட்டு தான் ஆகணும்..' தீவிர நோயால் பாதிக்கப்பட்ட பூனம் கவுர்
தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் சில படங்களே நடித்து பிரபலம் ஆனவர் நடிகை பூனம் கவுர். தெலுங்கு மொழியில் மாயாஜாலம் என்னும் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். தமிழில், நெஞ்சிருக்கும் வரை, உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, ஆச்சாரம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் குறித்து ஒரு சோகமான தகவல் வந்துள்ளது. நடிகை பூனம் ஃபைப்ரோமியால்ஜியா என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளாராம். இந்த நோய் வந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் அதோடு அவர் வாழ பழகிக்கொள்ள வேண்டுமாம். பரவலான தசைக்கூட்டு வலியுடன் கூடிய சோர்வு, தூக்கம், நினைவாற்றல் மற்றும் மனநிலை மாற்றம் போன்ற பிரச்சனைகள் இருக்கும் என்கின்றனர்.
இந்த நோய் இருப்பவர்கள் தன்னுடைய வாழ்க்கை முறையை மாற்றி உடற்பயிற்சி, தெரபிகள், சிகிச்சை கட்டாயம் எடுத்துக் கொள்ள தெரபிகள், இந்த நோய் ஒருவருக்கு வந்து விட்டால் வாழ்நாள் முழுவதும் அதோடு அவர் பழகிக் கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது. தற்போது பூனம் கவுர் இந்த நோயால் பாதிக்கபட்ட தகவல் சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலருமே ஆறுதலாக கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.